பொட்டு வச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபூவரசன்

Pottu Vacha Kiliye Song Lyrics in Tamil


ஆண் : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…

BGM

ஆண் : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…
பொத்தி வச்ச உறவே…
பூ முடிக்கும் இனியே…

ஆண் : மாலை இங்கிருக்கு…
கெட்டி மேளம் வந்திருக்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : ஊரும் வந்திருக்கு…
சிறுத் தேரும் வந்திருக்கு…

ஆண் : அள்ளி எடுக்கணும் சந்தனம் சந்தனம்…
மங்கை ஒடம்புல பூசணும் பூசணும்…

ஆண் : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…

குழு : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…

குழு : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…
பொத்தி வச்ச உறவே…
பூ முடிக்கும் கிளியே…

BGM

ஆண் : எப்பவும் சில காதல்…
எழுந்தாலே தடுக்கி விழும்…
இன்னும் சில காதல் எல்லாம்…
அரைக் கிணறு தாண்டி விடும்…

ஆண் : மொத்தத்துல காதலுக்கு…
எங்கேயும் எதிர்ப்பு வரும்…
உன்னோட காதல் மட்டும்…
மனம் போல மணம் முடிக்கும்…

ஆண் : வில்லனுங்க வம்பு தும்பு…
பண்ணாம நேரா…
உச்ச கட்டம் வந்திருச்சு…
உன் காதல் ஜோரா…

ஆண் : பூச்சூடும் பூங்குயிலே…
குழு : ஹே ஹே ஹே ஹே…
ஆண் : உன் கூட ஆண் குயிலே…
குழு : ஹே ஹே ஹே ஹே…

ஆண் : பாய விரிக்கவும் பாட்டுப் படிக்கவும்…
யோகமும் வந்ததடி… ஹேய்…

ஆண் : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…
பொத்தி வச்ச உறவே…
பூ முடிக்கும் இனியே…

ஆண் : மாலை இங்கிருக்கு…
கெட்டி மேளம் வந்திருக்கு…

குழு : ஊரும் வந்திருக்கு…
சிறுத் தேரும் வந்திருக்கு…

ஆண் : அள்ளி எடுக்கணும் சந்தனம் சந்தனம்…
மங்கை ஒடம்புல பூசணும் பூசணும்…

ஆண் : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…
கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…

BGM

குழு : வள்ளி வனப்புக்கும் வடிவழகி தோலுக்கும்…
அந்த ஆறுமுகம் தூளாச்சுது…
இந்த மஞ்ச முகத்துக்கும் மருதாணி பூச்சுக்கும்…
இந்த மச்சான் முகம் என்னாகுமோ…

BGM

ஆண் : நல்லபடி கணவனுக்கு…
நிழலாட்டம் நடந்திடணும்…
எள்ளு என்று சொல்லும் முன்னே…
எண்ணை போல் இருந்திடணும்…

ஆண் : ஒன்னு ரெண்டு போதுமின்னு…
அளவோட சுமந்திடணும்…
உள்ளததான் வச்சுக்கிட்டு…
நிறைவாக சுகப்படனும்…

ஆண் : கண்ணகியப் போல உன்ன…
ஊர் பேச வாழு…
மாதவிய தேடிக்கிட்டு…
போகமப் பாரு…

ஆண் : மாமன் மேல் சாஞ்சுகிட்டு…
குழு : ஹே ஹே ஹே ஹே…
ஆண் : மார்போடு தோய்ஞ்சுகிட்டு…
குழு : ஹே ஹே ஹே ஹே…

ஆண் : காலை வரையிலே கட்டிலறையிலே…
கொஞ்சிடு கண்மணியே… ஹோய்…

ஆண் : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…
பொத்தி வச்ச உறவே…
பூ முடிக்கும் இனியே…

ஆண் : மாலை இங்கிருக்கு…
கெட்டி மேளம் வந்திருக்கு…

குழு : ஊரும் வந்திருக்கு…
சிறுத் தேரும் வந்திருக்கு…

ஆண் : அள்ளி எடுக்கணும் சந்தனம் சந்தனம்…
மங்கை ஒடம்புல பூசணும் பூசணும்…

ஆண் : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…

குழு : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…
கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…


Notes : Pottu Vacha Kiliye Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. பொட்டு வச்ச பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading