பூசு மஞ்சள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா பௌட்வால்தேவாகனவே கலையாதே

Poosu Manjal Female Song Lyrics in Tamil


BGM

பெண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள்…
பூசுது பூவொன்று…
எண்ணம் போலே எண்ணம் போலே…
வந்தது வாழ்வென்று…

பெண் : தாய் தந்தை வாழ்த்துக்களால்…
இன்று என் காதல் ஈடுரூதே…
ஏன் இந்த மாற்றங்களோ…
இன்று என் கண்ணில் தேனூருதே…

பெண் : பொங்குதே சந்தோஷம் பொங்குதே… ஓ ஹோ ஓ…
சிந்துதே கண்ணீரும் சிந்துதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள்…
பூசுது பூவொன்று…
எண்ணம் போலே எண்ணம் போலே…
வந்தது வாழ்வென்று…

BGM

பெண் : கடல் நீரைக் கடன் வாங்கி…
என் கண் கொண்டு அழுதாலும்…
நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா…
பொங்குதே சந்தோஷம் பொங்குதே…

பெண் : இடம் மாறி வந்தாலும்…
தடம் மாறி போகாமல்…
என் காதல் கைக்கூட கண்டேனம்மா…
சிந்துதே கண்ணீரும் சிந்துதே…

பெண் : எண்ணம் போல் வாழ்வு கண்டேன்…
எல்லோரும் வாழ்த்தட்டுமே…
முன்னூறு ஆண்டு வரை…
என் மஞ்சள் வாழட்டுமே…

பெண் : மறு பிறப்பினிலும் ஏழு பிறப்பினிலும்…
இந்த தந்தைக்கும் தாய்க்கும் வந்து மகளென்று பிறந்திட…
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே… ஓ ஹோ ஓ…
பொங்குதே சந்தோஷம் பொங்குதே…

பெண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள்…
பூசுது பூவொன்று…
எண்ணம் போலே எண்ணம் போலே…
வந்தது வாழ்வென்று…

BGM

பெண் : ஆண் என்றால் ஒரு வீடு…
பெண் என்றால் இரு வீடு…
தாய்நாட்டு பண்பாடு தடை போடுமே…
பொங்குதே கண்ணீரும் பொங்குதே…

பெண் : கிளை எங்கே போனாலும்…
என் வேர்கள் இங்கேதான்…
என் ஜீவன் இங்கும் அங்கும் விளையாடுமே…
பொங்குதே சந்தோஷம் பொங்குதே…

பெண் : பொன் மாலை தந்தவனை…
எந்நாளும் காதலிப்பேன்…
வெண்மேகம் சிறகு தந்தால்…
விண்ணோடு வலம் வருவேன்…

பெண் : எந்தன் உயிர் மலரை உந்தன் திருவடியில்…
தந்து உனக்குள் கரைந்து இந்த உலகத்தை மறந்திட…
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே… ஓ ஹோ ஓ…
பொங்குதே கண்ணீரும் சிந்துதே…

பெண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள்…
பூசுது பூவொன்று…
எண்ணம் போலே எண்ணம் போலே…
வந்தது வாழ்வென்று…

பெண் : தாய் தந்தை வாழ்த்துக்களால்…
இன்று என் காதல் ஈடுரூதே…
ஏன் இந்த மாற்றங்களோ…
இன்று என் கண்ணில் தேனூருதே…

பெண் : பொங்குதே சந்தோஷம் பொங்குதே… ஓ ஹோ ஓ…
பொங்குதே சந்தோஷம் பொங்குதே…

BGM


Notes : Poosu Manjal Female Song Lyrics in Tamil. This Song from Kanave Kalaiyadh (1999). Song Lyrics penned by Vairamuthu. பூசு மஞ்சள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading