பூப்பறிக்க நீயும் போகாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன்தேவி ஸ்ரீ பிரசாத்உனக்கும் எனக்கும்

Pooparikka Neeyum Song Lyrics in Tamil


ஆண் : பூப்பறிக்க நீயும் போகாதே…
உன்னப் பாத்தாலே…
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி…
குழு : தந்தானே தந்தானே…

ஆண் : பொட்டு வைக்க நீயும் போகாதே…
உன்னப் பாத்தாலே…
கண்ணடி கைகள் நீட்டுமடி…
குழு : தந்தானே தந்தானே…

ஆண் : கோயிலுக்கு நீயும் போகாதே…
கோபுரங்கள் சாஞ்சி பாக்குமடி…
குழு : பாக்குமடி…

ஆண் : காட்டுக்குள்ள நீயும் போகாதே…
கொட்டுகிற தேனீக்கூட்டம்…
தேனெடுக்க உதட்டை சுத்துமடி… ஓஹோ ஹோ…

ஆண் : பூப்பறிக்க நீயும் போகாதே…
உன்னப் பாத்தாலே…
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி… ஹோ…

BGM

ஆண் : சூறாவளி போல போகிற…
இந்த இளமைய…
யாராச்சும் தடுக்க முடியுமா…

ஆண் : சுத்திச் சுத்தி ஆட்டம் போடுற…
இந்த வயசிடம்…
யாராச்சும் நெருங்க முடியுமா… ஹோ…

BGM

பெண் : ஹேய்… க க க ரி க ரி ச ச…
ச நீ நீ ச க க க ரி க ரி ச ச… ஆ ஆ ஆ…

BGM

ஆண் : ம்ம்ம்… ஆத்துக்குள்ள நீ குளிச்சா…
அங்க உள்ள மீனு எல்லாம்…
மீசையத்தான் சுத்திக்கிட்டு அலையுதடி…

ஆண் : ஆட்டுக்குட்டி கூட இப்ப…
தாடி ஒன்னு வச்சிக்கிட்டு…
ஒரு தலைக் காதலுடன் திரியுதடி…

ஆண் : குச்சுப்புடி கதகளியெல்லாம்…
உன் நடையிலே…
புதுப் புது பாடம் படிக்குமே…

ஆண் : ரங்கோலி கோலம் எதுக்கடி…
கொஞ்சம் வெக்கப்படு…
கன்னத்தில் வண்ணம் பிறக்குமே…

BGM

ஆண் : நாடு விட்டு நாடு வரும்…
வேடந்தாங்கல் வெள்ளைப் புறா…
யார் மனதில் கூடு கட்ட வருகிறதோ…

ஆண் : கால் முளச்ச சூரியனா…
தூள் கெளப்பி சுத்துறியே…
உன்னிடத்தில் எந்த நிலா ஒளி பெறுமோ…

ஆண் : வட்டமிடும் பட்டாம்பூச்சியே…
உன் வண்ணமெல்லாம் ஒட்டிக்கொள்ள…
பூவும் பூத்திருக்கு…

ஆண் : திட்டம் இல்ல திசையும் இல்லையே…
உன் வாலிபம் பறந்திடத் தடையும் எங்கிருக்கு…

BGM


Notes : Pooparikka Neeyum Song Lyrics in Tamil. This Song from Unakkum Enakkum (2006). Song Lyrics penned by Na. Muthukumar. பூப்பறிக்க நீயும் போகாதே பாடல் வரிகள்.


Scroll to Top