கிளியே கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜெஸ்ஸி கிபிட்தேவி ஸ்ரீ பிரசாத்உனக்கும் எனக்கும்

Kiliye Kiliye Song Lyrics in Tamil


ஆண் : தம்பி போற ஊருக்கு வழி சொல்லு…
குழு : தம்பி போற ஊருக்கு வழி சொல்லு…
ஆண் : கருப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு…
குழு : பொறுப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு…

பெண் : என் கொழந்த கூட வழி சொல்லும்…
குழு : அந்த பறவை கூட வழி சொல்லும்…
பெண் : உன் எடக்கு பாட்ட நிப்பாட்டு…
குழு : அப்ப தம்பிக்கு நீயே வழி காட்டு…

குழு : அட எங்க ஊரு அந்த பக்கம்…
வேலையெல்லாம் முடிஞ்சதும்…
வண்டி கட்டி கூட்டி போறேன் டேய்…

—BGM—

ஆண் : கிளியே கிளியே கீ கீ கிளியே…
கிளியே கிளியே கீ கீ கிளியே…
குயிலே குயிலே கூ கூ குயிலே…

ஆண் : அட கிளிதான் கிளிதான் நான் கூட…
என் மனச கூண்டுல அடச்சாலே…
அட குயில்தான் குயில்தான் நான் கூட…
என்ன இதய கூட்டில வச்சாளே…

ஆண் : காதல் நெனப்புல நானும் கூடத்தான்…
காத்தில் பறக்குறேன்…

ஆண் : கிளியே கிளியே கீ கீ கிளியே…
குயிலே குயிலே கூ கூ குயிலே…

—BGM—

ஆண் : அவள பாத்த போது…
என் பாதி உசுர பாத்தேன்…
உயிரும் உயிரும் பேசும் பாஷையே…
மூச்சுகுள்ளே கேட்டேன்…

ஆண் : அவ எதிரே வந்து நின்னா…
என் மீதி உசுர தருவேன்…
பார்வ படுகிற தூரம் போதுமே…
பக்தன் போல கெடப்பேன்…

ஆண் : அவ சிரிச்சா வெளிச்சம் உருவாகும்…
அவ எமிச்சா உலகம் இருட்டாகும்…

—BGM—

ஆண் : அவ பாத்தா போதும் பசி போகும்…
அவ இருக்கும் திசையே அழகாகும்…

ஆண் : ரெண்டு நொடிக்கு மேல் நடுவு கூட நான்…
அவள நெனைக்கிறேனே…

ஆண் : கிளியே கிளியே கீ கீ கிளியே…
குயிலே குயிலே கூ கூ குயிலே…

—BGM—

ஆண் : சில பொண்ணு சிரிப்பு அழகு…
சில பொண்ணு பேச்சு அழகு…
திமுரு கூட ஒரு அழகு என்று…
நான் அவள பார்த்து அறிஞ்சேன்…

ஆண் : சில பொண்ணு பாக்க அழகு…
சில பொண்ணு பழக அழகு…
ரெண்டு அழகுமே ஒன்னு சேர்ந்ததா…
அவள நானும் பாத்தேன்…

ஆண் : அவ கொடைய மறந்து வரும் போது…
நான் மழைய ரசிக்க மாட்டேனே…

—BGM—

ஆண் : என் நிழல்தான் அவ மேல் விழும்போதும்…
நான் வெயில வெறுக்க மாட்டேனே…

ஆண் : என்ன மாத்தினா ரத்த ஓட்டத்தில்…
தேன ஊத்தினாளே…

ஆண் : கிளியே கிளியே கீ கீ கிளியே…
குயிலே குயிலே கூ கூ குயிலே… ஹோ ஹோய்…

—BGM—


Notes : Kiliye Kiliye Song Lyrics in Tamil. This Song from Unakkum Enakkum (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கிளியே கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading