| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மதன் கார்க்கி | யாசின் நிசார் | அரோல் கோரெல்லி | பசங்க 2 |
Pookkalai Killi Vandhu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூக்களை கிள்ளி வந்து இங்கே போட்டது யார்…
புன்னகை போதுமென்று இங்கே சொன்னது யார்…
ஆண் : தன் வேரும் மாறி நீரும் மாறி ஊரும் மாறியே…
எங்கனம் வாசம் வீசுவதோ…
வண்ணங்கள் நீக்கி விட்டால் எங்கனம் பேசுவதோ…
கண்ணாடி ஜாடிக்குள்ள எங்கனம் ஆடுவதோ…
ஆண் : தாய் பாசம் நீங்கி ஈரம் நீங்கி யாவும் நீங்கியே…
எந்திரம் போலே மாறுவதோ…
—BGM—
ஆண் : நேற்று கேட்ட கூச்சல் எல்லாம்…
மௌனமாகி கொள்கிறதே…
ஆட்டம் போட்ட கூடம் இன்று…
காலியாகி நிற்கிறதே…
ஆண் : தாயும் அங்கே தந்தை அங்கே…
ஏன் அநாதை போல இங்கே…
ஆண் : தன் கூடும் மாறி காடும் மாறி யாவும் மாறியே…
எங்கனம் இன்பம் சூடுவதோ…
ஆண் : பூக்களை கிள்ளி வந்து இங்கே போட்டது யார்…
புன்னகை போதுமென்று இங்கே சொன்னது யார்…
ஆண் : தன் வேரும் மாறி நீரும் மாறி ஊரும் மாறியே…
எங்கனம் வாசம் வீசுவதோ…
வண்ணங்கள் நீக்கி விட்டால் எங்கனம் பேசுவதோ…
கண்ணாடி ஜாடிக்குள்ள எங்கனம் ஆடுவதோ…
ஆண் : தாய் பாசம் நீங்கி ஈரம் நீங்கி யாவும் நீங்கியே…
எந்திரம் போலே மாறுவதோ…
தன் கூடும் மாறி காடும் மாறி யாவும் மாறியே…
எங்கனம் இன்பம் சூடுவதோ…
Notes : Pookkalai Killi Vandhu Song Lyrics in Tamil. This Song from Pasanga 2 (2015). Song Lyrics penned by Madhan Karky. பூக்களை கிள்ளி பாடல் வரிகள்.