பூக்களின் போர்வை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சீன் ரோல்டன் & கீர்த்தனா வைத்தியநாதன்கோவிந்த் வசந்தாபொன்மகள் வந்தாள்

Pookalin Porvai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அப்பன் குடுத்த…
பூமிப் பந்தா…
நீ ஒதைச்சு ஆட்டம் போட…
ஒன்னப்போல உயிர்கள் உண்டு…
வாழ விடு அதையும் கூட…

பெண் : பூக்களுடன் சேர்ந்து விளையாடு…
காற்று வரும் கவிதை உரையாடு…
காலம் வரும் என்றே நடைபோடு…

ஆண் & பெண் : பூமி தரும் மழையில் ஆடு…

ஆண் : மானிடர் காடு மானிடர் காடு…
வேகமாய் ஓடு…
எதையும் பார்க்காதே…

ஆண் & பெண் : ஊரே ஓடும்…
கேள்வி கேட்காமல்…
மந்தையாகி உருண்டோடு…

—BGM—

ஆண் : பூக்களின் போர்வ…
போர்வ… போர்வ போர்வ போர்வ…
மலையில் அருவி வேர்வ…
உயிர்கள சொமக்கும்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
மலையும் பெண்ணோ…

ஆண் & பெண் : பெண்மையோ பயமே அறியாது…
தலை தாழ்ந்து வலிவது கிடையாது…
ஆன போதும் உறவுக்காக தெனமுமே…
ஏங்கி ஏங்கி வாழும்…
தாய்மனம் சுயமே அறியாது…
அன்புக்கு அளவே கிடையாது…
தீ பிடிச்சி உருகும்போது…
தன்னையே தீபமாக நீட்டும்…

ஆண் : நீ வாழவே…

—BGM—

ஆண் : தன்ன விடவும் உன்ன நினைக்க…
மண்ணில் ஒரு ஜீவன் பூக்கும்…
நம்பி இருந்தா நாளை ஒலகம்…
உன்ன வச்சு காவல் காக்கும்…

ஆண் & பெண் : வாழ்க்க வரும் மழலை பேச்சாக…
கேட்டிருக்க நேரம் ஒனக்கில்ல…
பாதி உயிர் கண்ணீர் கண்ணோட…
யாருக்குமே கவலை இல்ல…

ஆண் : மாறுமே வாழ்க்க மாறுமே…
மீண்டும் வாசன வீச வருமே ஒருநாளு…
எல்லா விதையும் மேல போகும் இங்க…
வேற பாத கெடையாது…

—BGM—


Notes : Pookalin Porvai Song Lyrics in Tamil. This Song from Ponmagal Vandhal (2020). Song Lyrics penned by Vivek. பூக்களின் போர்வை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading