பூக்கள் பூக்கும் தருணம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரூப் குமார் ரத்தோட், ஜி. வி. பிரகாஷ் குமார், ஹரினி & ஆண்ட்ரியா எரேமியாஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Pookal Pookum Song Lyrics in Tamil


ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…

ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…

பெண் : உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…

ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே…
உனது அருகே நேரம் போதவில்லையே…

பெண் : எதுவும் பேசவில்லையே…
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…
இது எதுவோ…

ஆண் : இரவும் விடியவில்லையே…
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே…
பூந்தளிரே… ஓஹோ…

ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…

—BGM—

ஆண் : வார்த்தை தேவையில்லை…
வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே…

பெண் : நேற்று தேவை இல்லை…
நாளை தேவையில்லை…
இன்று இந்த நொடி போதுமே…

ஆண் : வேரின்றி விதையின்றி…
விண் தூவும் மழை இன்றி…
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே…

பெண் : வாள் இன்றி போர் இன்றி…
வலிக்கின்ற யுத்தம் இன்றி…
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே…

ஆண் : இதயம் முழுதும் இருக்கும்…
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்…

பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்…
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்…

ஆண் : பூந்தளிரே… ஆ… ஆ…

பெண் : ஓ வேர் வுட் ஐ பி…
வித்அவுட் திஸ் ஜாய்…
இன்சைட் ஆப் மீ…
இட் மேக்ஸ் மீ வான்ட்…
டு கம் அலைவ்…
இட் மேக்ஸ் மீ வான்ட் டு ப்ளை…
இன்டு தி ஸ்கை…
ஓ வேர் வுட் ஐ பி…
இப் ஐ டிட்நாட் ஹவ் யூ நெக்ஸ்ட் டு மீ…
ஓ வேர் வுட் ஐ பி ஓ வேர்…
ஓ வேர்… ஓ வேர்…

—BGM—

ஆண் : எந்த மேகம் இது…
எந்தன் வாசல் வந்து…
எங்கும் ஈரமழை தூவுதே…

பெண் : எந்த உறவு இது…
எதுவும் புரியவில்லை…
என்ற போதும் இது நீளுதே…

ஆண் : யார் என்று அறியாமல்…
பேர் கூட தெரியாமல்…
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே…

பெண் : ஏன் என்று கேட்காமல்…
தடுத்தாலும் நிற்காமல்…
இவன் போகும் வழி எங்கும்…
மனம் போகுதே…

ஆண் : பாதை முடிந்த பிறகும்…
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே…

பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்…

பெண் & ஆண் : இலை தொடங்கும்…
நடனம் முடிவதில்லையே…
இது எதுவோ…

ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…

ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனை…
பார்த்ததாரும் இல்லையே…

பெண் : உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…

ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே…
உனது அருகே நேரம் போதவில்லையே…

பெண் : எதுவும் பேசவில்லையே…
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…

ஆண் & பெண் : என்ன புதுமை…
இரவும் விடியவில்லையே…
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே…

ஆண் : அது எதுவோ…

ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…


Notes : Pookal Pookum Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthu Kumar. பூக்கள் பூக்கும் தருணம் பாடல் வரிகள்.


Scroll to Top