பூ மீது யானை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புகழேந்திமால்குடி சுபாவிஜய் ஆண்டனிடிஷ்யூம்

Poo Meedhu Song Lyrics in Tamil


பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

பெண் : போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ…
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…

பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே…
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே…
இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே…
உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஹே… உடைத்துப் பார்க்கும் இதயம் உனது…
படைத்து பார்ப்பதை அறியாதே…
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு…
நிஜத்தின் உலகத்தில் உடையாதே உடையாதே…

பெண் : உடைத்துப் பார்க்கும் இதயம் உனது…
படைத்து பார்ப்பதை அறியாதே…
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு…
நிஜத்தின் உலகத்தில் உடையாதே…

பெண் : காதல் போலவே நோயும் எல்லையே…
யாவும் உண்மைதானே…
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்…
கேட்கவில்லை நானே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

BGM

பெண் : விலகும்போது நெருங்கும் காதல்…
அருகில் போனால் விலகிடுமோ…
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி…
விருப்பம் போல அது வலி தரமோ… ஆஆ ஹா…

பெண் : விலகும்போது நெருங்கும் காதல்…
அருகில் போனால் விலகிடுமோ…
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி…
விருப்பம் போல அது வலி தரமோ…

பெண் : வேற வேற நா நினைவு போகையில்…
காதல் கொள்வது பாவம்…
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே…
ஆதி கால சாபம்…

BGM

பெண் : பூ மீது யானைபூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ…
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…

பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே…
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே…
இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே…
உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…


Notes : Poo Meedhu Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Pugazhendhi. பூ மீது யானை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading