காதல் அழிவதில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி. பாலசுப்ரமணியம்டி. ராஜேந்தர்காதல் அழிவதில்லை

Kadhal Azhivathillai Song Lyrics in Tamil


ஆண் : காதல் அழிவதில்ல…
கடல் அலை போல் ஓய்வதில்ல…
காதல் வா என்றால் வருவதில்ல…
காதல் போ என்றால் போவதில்ல…

ஆண் : நெனச்சா நெனச்சதுதான்…
யாரும் அடிச்சாலும் அழியாது…

BGM

ஆண் : காதல் காதல் அது அழிவதில்ல…
அலைகள் அலைகள் அது ஓய்வதில்ல…

ஆண் : காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி…
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி…

ஆண் : ஒரு முறை நெனச்சி விட்டா மறக்கவும் முடியாது…
நெருப்பு வெச்சி சுட்டா கூட காதல் நெஞ்சு வேகாது…

ஆண் : உயிரே உனக்கது தெரியாதா…
காதல் அழிவதில்லை புரியாதா…

ஆண் : சொல்லடி சொல்லடி என் காதலியே…
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலையே…
சொல்லடி சொல்லடி என் காதலியே காதலியே…
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே தாங்கலியே…

ஆண் : காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி…
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி…

BGM

ஆண் : பெத்தவங்க ஒத்து கொண்டா…
நீயும் நானும் காதலிச்சோம்…
மத்தவங்க ஒப்புதல் தந்தா…
நீயும் நானும் சந்திச்சோம்…

ஆண் : கண்ணும் கண்ணும் பார்த்து கொள்ள…
காதலும் தான் மலர்ந்தது…
நெஞ்சும் நெஞ்சும் நினைத்து கொள்ள…
நேசமும் தான் வளர்ந்தது…

ஆண் : அந்தஸ்தையும்பணத்தையும் மட்டும்…
பெற்றோர் சிலர் மதிப்பாங்க…
அன்பு வச்ச புள்ளைங்க மனச…
பிரிச்சு வைக்க பார்ப்பாங்க…

ஆண் : பத்திரிக்கை அடிச்சாலும்…
பத்து கைகள் தடுத்தாலும்…
நிர்ப்பந்தமே செஞ்சாலும்…
நிச்சயமே முடிந்தாலும்…

ஆண் : அணை போட்ட வெள்ளம் நிக்குமே…
தட போட்டா உள்ளம் நிக்குமா…
தடபோட்டா காதல் உள்ளம் நிக்குமா…

ஆண் : காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி…
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி…

BGM

ஆண் : ஜாதி மத மொழியை எல்லாம்…
கடந்துதான் காதலடி…
சொந்தபந்த எதிர்ப்பை எல்லாம்…
மீறி நிற்பதே காதலடி…

ஆண் : பெண்கள் சமயத்தில் பெத்தவங்க…
ஆட்டி வைக்கும் பொம்மையடி…
காதலா் என்னை வெறுப்பதாய்…
நீ சொல்வதில் இல்லை உண்மையடி…

ஆண் : எதிர்ப்புகள் வந்தால் கூட…
எதிர் நீச்சல் அடிக்கனும்டி…
தேசம் விட்டு கடத்துனாலும்…
துணிந்த காதல் ஜெயிக்குமடி…

ஆண் : சட்டம் போட்டு தடுத்தாலும்…
திட்டம் போட்டு வதைத்தாலும்…
ஊர் கூடி எதிர்த்தாலும்…
உடம்பு இரண்டா பிரிச்சாலும்…

ஆண் : உதடு வேணா மாறி பேசும்…
உள்ளம் மட்டும் மாறாது…
காதல் உள்ளம் மட்டும் மாறாது…
காதல் உள்ளம் மட்டும் மாறாது…

ஆண் : காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி…
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி…

ஆண் : ஒரு முறை நெனச்சி விட்டா மறக்கவும் முடியாது…
நெருப்பு வச்சி சுட்டா கூட காதல் நெஞ்சு வேகாது…

ஆண் : உயிரே உனக்கது தெரியாதா…
காதல் அழிவதில்லை புரியாதா…

ஆண் : சொல்லடி சொல்லடி என் காதலியே…
நீ சொன்னது சொன்னதுதான் தாங்கலையே…
சொல்லடி சொல்லடி என் காதலியே காதலியே…
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே தாங்கலியே…


Notes : Kadhal Azhivathillai Song Lyrics in Tamil. This Song from Kadhal Azhivathillai (2002). Song Lyrics penned by T. Rajender. காதல் அழிவதில்லை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top