பிரியாதிரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாயுவன் ஷங்கர் ராஜாஜஸ்டின் பிரபாகரன்இறுகப்பற்று

Piriyathiru Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழை நீரின் கூட்டிலே…
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி…
அலைபாயும் காற்றிலே…
அது கரைந்து போகுதே பாரடி…

ஆண் : அழகான நேசமே…
புதிரான கேள்வியாய் ஆனாதே…
புரியாத தேடலை…
நம் வாழ்க்கை ஆனாதே ஏனடி…

ஆண் : நதி இல்லா காடாக…
மதி இல்லா வானாக…
அலை இல்லா கடலாக…
ஆவதோ பிரியாதிரு…

ஆண் : வழி இல்லா வீடாக…
நிலை இல்லா கூடாக…
குரல் இல்லா குயிலாக…
ஆவதோ பிரியாதிரு…

குழு : பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…

குழு : பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…

ஆண் : மழை நீரின் கூட்டிலே…
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி…
அலைபாயும் காற்றிலே…
அது கரைந்து போகுதே பாரடி…

ஆண் : அழகான நேசமே…
புதிரான கேள்வியாய் ஆனாதே…
புரியாத தேடலை…
நம் வாழ்க்கை ஆனாதே ஏனடி…

BGM

ஆண் : பிழையான நேற்றுக்கு…
பரிகாரம் வாராத…
புதிதாக ஓர் வாழ்வை…
வாழ்த்திருப்போமா அன்பே…

ஆண் : வழி தேடும் நெஞ்சுக்கு…
விடை வந்து சேராத…
நிலை மாறும் வரை நாமும்…
காத்திருப்போமா அன்பே…

ஆண் : ஊடல் இல்லா காதல்…
காதல் இல்லா கூடல்…
வாசல் இல்லா குடிலாய்…
ஆகாதோ சொல் அன்பே…

ஆண் : ஒரு கண்ணில் கோபம்…
மறு கண்ணில் தாபம்…
அடி இது என்ன வேதம்…
பிழைக்காதோ காதல்…

ஆண் : நதி இல்லா காடாக…
மதி இல்லா வானாக…
அலை இல்லா கடலாக…
ஆவதோ பிரியாதிரு…

ஆண் : வழி இல்லா வீடாக…
நிலை இல்லா கூடாக…
குரல் இல்லா குயிலாக…
ஆவதோ பிரியாதிரு…

குழு : பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…

குழு : பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…

ஆண் : பிழைக்காதோ காதல்…
பிழைக்காதோ காதல்…
பிழைக்காதோ காதல்…
காதல்…

ஆண் : பிழைக்காதோ காதல்…
பிழைக்காதோ…
பிழைக்காதோ… பிழைக்காதோ…
பிழைக்காதோ காதல்…


Notes : Piriyathiru Song Lyrics in Tamil. This Song from Irugapatru (2023). Song Lyrics penned by Karthik Netha. பிரியாதிரு பாடல் வரிகள்.


Scroll to Top