கண்ணா கருமை நிற கண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஆர்.சுதர்சனம்நானும் ஒரு பெண்

Kanna Karumai Nira Kanna Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணா… கருமை நிற கண்ணா…
உன்னை காணாத கண்ணில்லையே…

பெண் : கண்ணா… கருமை நிற கண்ணா…
உன்னை காணாத கண்ணில்லையே…
உன்னை மறுப்பாரில்லை…
கண்டு வெறுப்பாரில்லை…
என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை…

பெண் : கண்ணா… கருமை நிற கண்ணா…
உன்னை காணாத கண்ணில்லையே…
உன்னை மறுப்பாரில்லை…
கண்டு வெறுப்பாரில்லை…
என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை…

பெண் : கண்ணா… கருமை நிற கண்ணா…
உன்னை காணாத கண்ணில்லையே…

BGM

பெண் : மனம் பார்க்க மறுப்போர் முன்…
படைத்தாய் கண்ணா…
நிறம் பார்த்து வெறுப்போர் முன்…
கொடுத்தாய் கண்ணா…

பெண் : மனம் பார்க்க மறுப்போர் முன்…
படைத்தாய் கண்ணா…
நிறம் பார்த்து வெறுப்போர் முன்…
கொடுத்தாய் கண்ணா…

பெண் : இனம் பார்த்து என்னை சேர்க்க…
மறந்தாய் கண்ணா…

BGM

பெண் : இனம் பார்த்து என்னை சேர்க்க…
மறந்தாய் கண்ணா…
நல்ல இடம் பார்த்து சிலையாக…
அமர்ந்தாய் கண்ணா…

பெண் : கண்ணா… கருமை நிற கண்ணா…
உன்னை காணாத கண்ணில்லையே…

BGM

பெண் : பொன்னான மனம் ஒன்று…
தந்தாய் கண்ணா…
அதில் பூ போன்ற நினைவொன்று…
வைத்தாய் கண்ணா…

பெண் : பொன்னான மனம் ஒன்று…
தந்தாய் கண்ணா…
அதில் பூ போன்ற நினைவொன்று…
வைத்தாய் கண்ணா…

பெண் : கண் பார்க்க முடியாமல்…
மறைத்தாய் கண்ணா…

BGM

பெண் : கண் பார்க்க முடியாமல்…
மறைத்தாய் கண்ணா…
எந்த கடன் தீர்க்க என்னை நீ…
படைத்தாய் கண்ணா…

பெண் : கண்ணா… கருமை நிற கண்ணா…
உன்னை காணாத கண்ணில்லையே…
உன்னை மறுப்பாரில்லை…
கண்டு வெறுப்பாரில்லை…
என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை…

பெண் : கண்ணா… கருமை நிற கண்ணா…
உன்னை காணாத கண்ணில்லையே…


Notes : Kanna Karumai Nira Kanna Song Lyrics in Tamil. This Song from Naanum Oru Penn (1963). Song Lyrics penned by Kannadasan. கண்ணா கருமை நிற கண்ணா பாடல் வரிகள்.


Scroll to Top