பிரிவொன்றை சந்தித்தேன் 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்பிரியாத வரம் வேண்டும்

Pirivondrai Santhithen Song Lyrics in Tamil


BGM

ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று…
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று…
நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை…
நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை…

ஆண் : ஓடோடி வாராயோ…
அன்பே அன்பே அன்பே அன்பே…
அன்பே அன்பே அன்பே அன்பே…

ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று…
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று…

BGM

ஆண் : ஒரு வரி நீ ஒரு வரி நான்…
திருக்குறளாய் உன்னை சொன்னேன்…
தனி தனியே பிரித்து வைத்தால்…
பொருள் தருமோ கவிதை இங்கே…

ஆண் : உன் கைகள் என்றே நான்…
துடைக்கின்ற கை குட்டை…
நீ தொட்ட அடையாளம்…
அழிக்காது என் சட்டை…

ஆண் : என்னை நானே தேடி போனேன்…
பிரிவில் நானே நீயாய் ஆனேன்…

ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று…
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று…

BGM

ஆண் : கீழ் இமை நான் மேல் இமை நீ…
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே…
மேல் இமை நீ பிரிந்ததனால்…
புரிந்து கொண்டேன் காதல் என்றே…

ஆண் : நாம் பிறந்த நாளில்தான்…
நம்மை நான் உணர்ந்தேனே…
நாம் பிறந்த நாளில்தான்…
நம் காதல் திறந்தேனே…

ஆண் : உள்ளம் எங்கும் நீயே நீயே…
உயிரின் தாகம் காதல்தானே…

ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று…
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று…
நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை…
நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை…

ஆண் : ஓடோடி வாராயோ…
அன்பே அன்பே அன்பே அன்பே…
அன்பே அன்பே அன்பே அன்பே…

BGM


Notes : Pirivondrai Santhithen Song Lyrics in Tamil. This Song from Piriyadha Varam Vendum (2001). Song Lyrics penned by Arivumathi. பிரிவொன்றை சந்தித்தேன்  பாடல் வரிகள்.


Scroll to Top