பிஞ்சு பிஞ்சு மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசித் ஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாநானே வருவேன்

Pinju Pinju Mazhai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன…
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன…
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன…
அந்தி பகல் உருமாறுவதென்ன…

ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன…
முன்னம் செய்த தவமோ என எண்ண…
கன்னக்குழி கதை நீளுவதென்ன…
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன…

ஆண் : பால் முகம்…
பகல் இரவையும் மாற்றுவதென்ன…
பசுந்தளிரென ஆக்குவதென்ன…
கலங்கரை அவள் பார்வையே…

ஆண் : தேன் மழை…
தினம் தினம் எனை தீண்டுவதென்ன…
திசை மறந்திட தூங்குவதென்ன…
கதிர் ஒளி அவள் வார்த்தையே…

ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று…
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு…
என் வாழ்வில் நான் அதை…
பார்த்திட பூத்தவள் என் மகளே…

ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று…
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு…
ஓடாமலே உறைவது என்ன காலங்களே…

—BGM—

ஆண் : மகளே உன்னைப் பார்க்கையில் பறப்பேனே…
நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே…
உன் கை விரலே ஒரு தூரிகையாய்…
தீட்டிடுதே என்னை ஓவியமாய்…

ஆண் : உன் இதழ்கள் பேசும் பேச்சை…
இமைக்குள் வைத்து தாங்கிடுவேன்…
இது போதும் இது போதும் என் மகளே…

ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன…
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன…
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன…
அந்தி பகல் உருமாறுவதென்ன…

ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன…
முன்னம் செய்த தவமோ என எண்ண…
கன்னக்குழி கதை நீளுவதென்ன…
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன…

ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று…
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு…
என் வாழ்வில் நான் அதை…
பார்த்திட பூத்தவள் என் மகளே…

ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று…
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு…
ஓடாமலே உறைவது என்ன காலங்களே…

—BGM—


Notes : Pinju Pinju Mazhai Song Lyrics in Tamil. This Song from Naane Varuvean (2022). Song Lyrics penned by Yugabharathi. பிஞ்சு பிஞ்சு மழை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading