பெத்த மனசு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன்னெப்பெத்த ராசா

Petha Manasu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…
தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வெறுங்கைய வீசிக் கொண்டு விறகு சுமந்து விட்டு…
இரவா பகலா தினம் தினம் உளைச்சதும்…
சருகு பொறுக்கி வந்து சாதம் வடிச்சுத் தந்து…
பசியே தெரியா மகனா வளர்த்ததும்…

ஆண் : எத்தன தாயுங்க நம்ம தமிழ் நாட்டிலே…
என் தாயி அவளப்போல் யாரு இந்த ஊரிலே…
தியாகி யாரு தியாகி யாரும் இல்ல போடா…
தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு வாடா…
அவதான் கோயில் அவதான் உலகம்…

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…

BGM

ஆண் : மண்ணில் வரும் செடி கொடிகள் எவ்வளவு வகைகள்தான்…
மரமோ கொடியோ தண்ணி மட்டும் ஒண்ணேதான்…
பல வித மரங்கள் என்ன மரத்தில பழங்கள் என்ன…
நிறத்தில் ருசியில் ஒவ்வொண்ணும் வேறதான்…

ஆண் : பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா…
காயாய் இருப்பதால் கொய்யா கசக்குமா…
நல்ல வயித்தில் பொறந்தா நல்லவனேதாண்டா…
கெட்டது செய்யமாட்டான் வல்லவனேதாண்டா…
அவனே மனிதன் அதை நீ உணரு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…
தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கு மேலதான்…
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…


Notes : Petha Manasu Song Lyrics in Tamil. This Song from Enna Petta Rasa (1989). Song Lyrics penned by Ilaiyaraaja. பெத்த மனசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading