பேரைச் சொல்லவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகுரு (1980)

Perai Chollava Song Lyrics in Tamil


பெண் : பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா…
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா…

பெண் : நான் பாடும் ஸ்ரீராகம் எந்நாளுமே நீயல்லவா…
என் கண்ணனே என் மன்னவா…

ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை…
தங்க மாங்கனி என் தர்ம தேவதை…

ஆண் : நான் பாடும் ஸ்ரீராகம் எந்நாளுமே நீயல்லவா…
என் பூங்கொடி விடை சொல்லவா…

பெண் : பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா…

BGM

ஆண் : இடையொரு கொடி இதழொரு கனி…
இன்ப லோகமே உன் கண்கள் தானடி…

பெண் : மலரெனும் முகம் அலைவது சுகம்…
ஒன்று போதுமே இனி உங்கள் தேன்மொழி…

ஆண் : நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது…
பெண் : நான் கேட்டது அருகே நின்றது…
ஆண் : இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்…

பெண் : பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா…
ஆண் : பா பா ப ப பா… ப ப ப பா பா…

BGM

பெண் : புது மழையிது சுவை தரும் மது…
வல்ல பூச்சரம் அது இதழில் வந்தது…

ஆண் : இனியது இது கழிந்தது அது…
இளமை என்பது உன் உடலில் உள்ளது…

பெண் : நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்…
ஆண் : நான் பார்த்தது அழகின் ஆலயம்…
பெண் : இதுதான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்…

ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை…
பெண் : பபபபபப பா… பா பா பா பா…

BGM

ஆண் : நவமணி ரதம் நடைபெறும் விதம்…
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்…

பெண் : கவிதைகள் தரும் கலையுந்தன் வசம்…
கங்கையாறுபோல் இனி பொங்கும் மங்களம்…

ஆண் : ஓராயிரம் தேனாறுகள் வந்தன…
பெண் : நீராடுவோம் தினமும் நீந்துவோம்…
ஆண் : சரிதான் நடக்கட்டும் இளமையின் ரசனை…

பெண் : பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா…
ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை…

பெண் : நான் பாடும் ஸ்ரீராகம்…
லாலலலா… லாலலலா…

ஆண் : லாலாலலா லல லாலாலலா…
பபப பா பப பா ப பா பா…


Notes : Perai Chollava Song Lyrics in Tamil. This Song from Guru (1980). Song Lyrics penned by Kannadasan. பேரைச் சொல்லவா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top