பேர் வச்சாலும் வைக்காம போனாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாமைக்கேல் மதன காமராஜன்

Per Vachalum Vaikama Ponalum Song Lyrics in Tamil


BGM

ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்…
மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…

ஆண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்…
தொட்டுப் பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…

பெண் : மொட்டுத்தான் வந்து…
சொட்டுத் தேன் தந்து…
கிட்டத் தான் ஒட்டத்தான்…
கட்டத் தான் அப்பப்பா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வச்சாலும் வைக்காம போனாலும்…
மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…

பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்…
தொட்டுப் பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…

BGM

ஆண் : கோடை வெப்பத்தில்…
கோயில் தெப்பத்தில்…
ஏறலாம் ஏறலாம்…

பெண் : காமன் குன்றத்தில்…
காதல் மன்றத்தில்…
சேரலாம் சேரலாம்…

ஆண் : கோடை வெப்பத்தில்…
கோயில் தெப்பத்தில்…
ஏறலாம் ஏறலாம்…

பெண் : காமன் குன்றத்தில்…
காதல் மன்றத்தில்…
சேரலாம் சேரலாம்…

ஆண் : மந்தாரை செடியோரம்…
கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்…

பெண் : சந்தோஷம் பெறலாமா…
ஹோய்… அதில் சந்தேகம் வரலாமா…

ஆண் : பந்தக்கால் நட்டு…
பட்டுப்பாய் இட்டு…
மெல்லத்தான் அள்ளத்தான்…
கிள்ளத்தான் அப்பப்பா…

பெண் : வச்சாலும் வைக்காம போனாலும்…
மல்லி வாசம்…
ஆண் : ஹே…
பெண் : அது குத்தால சுக வாசம்…

பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்…
தொட்டுப் பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…

ஆண் : மொட்டுத்தான் வந்து…
சொட்டுத் தேன் தந்து…
கிட்டத்தான் ஒட்டத்தான்…
கட்டத்தான் அப்பப்பா…

பெண் : வச்சாலும் வைக்காம போனாலும்…
மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…

BGM

பெண் : காதல் மன்னனா…
நீயும் கண்ணனா…
நாளும் ஓர் அலங்காரமா…

ஆண் : தோழி மெல்லத்தான்…
தேதி சொல்லத்தான்…
தோன்றினேன் அவதாரமா…

பெண் : காதல் மன்னனா…
நீயும் கண்ணனா…
நாளும் ஓர் அலங்காரமா…

ஆண் : தோழி மெல்லத்தான்…
தேதி சொல்லத்தான்…
தோன்றினேன் அவதாரமா…

பெண் : கல்யாணம் முடிக்காது…
நம்ம கச்சேரி தொடங்காது…

ஆண் : கல்லாலே அணை போட்டு…
ஹே… இந்த காவேரி அடங்காது…

பெண் : அப்பப்பா அப்பு…
தப்பப்பா தப்பு…
செட்டப்பா செட்டப்பா…
எட்டிப்போ அப்பப்பா…

ஆண் : வச்சாலும் வைக்காம போனாலும்…
மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…

பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்…
தொட்டுப் பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…

ஆண் : மொட்டுத்தான் வந்து…
சொட்டுத் தேன் தந்து…
கிட்டத்தான் ஒட்டத்தான்…
கட்டத்தான் அப்பப்பா…

பெண் : வச்சாலும் வைக்காம போனாலும்…
மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…

ஆண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்…
தொட்டுப் பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…


Notes : Per Vachalum Vaikama Ponalum Song Lyrics in Tamil. This Song from Michael Madana Kama Rajan (1990). Song Lyrics penned by Vaali. பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading