பெண்ணொருத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்பரத்வாஜ்ஜெமினி

Penn Oruthi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்…
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவிட்டாய்…
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்…

ஆண் : நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்…
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்…
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்…

ஆண் : பிரம்மா ஓ பிரம்மா…
இது தகுமா இது தகுமா…
அய்யோ இது வரமா சாபமா…

ஆண் : பிரம்மா ஓ பிரம்மா…
இது தகுமா இது தகுமா…
அய்யோ இது வரமா சாபமா…

ஆண் : பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்…
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவிட்டாய்…
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்…

—BGM—

ஆண் : கண்களிலே பெளத்தம் பார்த்தேன்…
கன்னத்தில் சமணம் பார்த்தேன்…
பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்…

ஆண் : பற்களிலும் கருணை பார்த்தேன்…
பாதங்களில் தெய்வம் பார்த்தேன்…
புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்…

ஆண் : புயலென்று நினைத்தேன் என்னை…
புயல் கட்டும் கயிறாய் வந்தாள்…
மலை என்று நினைத்தேன் என்னை…
மல்லிகையால் மலையை சாய்த்தாள்…
நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே…

ஆண் : பிரம்மா ஓ பிரம்மா…
இது தகுமா இது தகுமா…
அய்யோ இது வரமா சாபமா…

ஆண் : பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்…
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவிட்டாய்…
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்…

—BGM—

ஆண் : பகலெல்லாம் கருப்பாய் போக…
இரவெல்லாம் வெள்ளை ஆக…
என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ…

ஆண் : அய்யய்யோ உலக உருண்டை…
அடி வயிற்றில் சுற்றுவதென்ன…
அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ…

ஆண் : எரிமலையின் கொண்டை மேலே…
ரோஜாவை நட்டவள் யாரோ…
காதல் எனும் கணவாய் வழியே…
என்தேசம் புகுந்தவள் யாரோ…
சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே…

ஆண் : பிரம்மா ஓ பிரம்மா…
இது தகுமா இது தகுமா…
அய்யோ இது வரமா சாபமா…

ஆண் : பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்…
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவிட்டாய்…
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்…

ஆண் : நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்…
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்…
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்…

ஆண் : பிரம்மா ஓ பிரம்மா…
இது தகுமா இது தகுமா…
அய்யோ இது வரமா சாபமா…

ஆண் : பிரம்மா ஓ பிரம்மா…
இது தகுமா இது தகுமா…
அய்யோ இது வரமா சாபமா…


Notes : Penn Oruthi Song Lyrics in Tamil. This Song from Gemini (2002). Song Lyrics penned by Vairamuthu. பெண்ணொருத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading