பத்திக்காத தீயாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்விஜய் யேசுதாஸ், சின்மயி & ரக்ஷிதா சுரேஷ்ஏ.ஆர்.ரகுமான்The Goat Life

Pathikatha Thee Song Lyrics in Tamil


பெண் : பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய்…
குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய்…
தத்தி தாவும் தீவாய் எனை செய்தாய்…
நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய்…

பெண் : புது ரமலான் பிறை…
இங்கு கொடுத்தான் இறை…
அவன் அன்பால் நானும் நிறைந்து வழிந்தேன்…

பெண் : உன் போர்வையாய் நான் இருக்கிறேன்…
நீ எனை அள்ளி தினம் தினம் தினம் போர்த்திடு…

பெண் : பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய்…
குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய்…
கத்தி பேசும் மொழியை கொலை செய்தாய்…
நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய்…

ஆண் : ஓமனே என் ஓமனே…
வான் மேகம் தேடும் தாகம் நீ…
வானிலே வரும் வெண்ணிலா…
தினம் அள்ளி போகும் மோகம் நீ…
இன்னும் கொஞ்சம் இந்த கொஞ்சல் நீளுமோ…

பெண் : நீராடு நீ…
என் உடல் எனும் கடலுக்குள் இடவலம்…
நீராடு நீ…
என் உயிர் சூழல் ஆழத்தில் ஓடி நீ…

பெண் : மூழ்குவாய் நடு நீசி சுட நீ…
வேகுவாய் நான்தான் கரைந்து உறைய…
உதிருதே உடலின் மென்மைகள்தான்…
பதறுதே பாவம் பாவை உடல்…

—BGM—

பெண் : ஜன்னத்தில் உள் ஒரு கஸ்தூரி முல்லையின்…
பூக்கும் கனவுகளே…

—BGM—

பெண் : தண்ணீர் பிறையில் தகிக்கும் மீன் ஆனேன்…
பன்னீர் அமிழ்தம் கசியும் பூ ஆனேன்…
ஈர மணலில் நனையும் நீர் ஆனேன்…
காடு கடல்கள் பருகும் பசி ஆனேன்…

பெண் : என் நிலை கண்டு நீ பேய் மழை பெய்திடு…
நனைந்தாலும் ஏன் காய்கிறேன் நான்…
விடாமலே எனை விழுங்கிடு…
கடல் குறுகி நதி குறுகி துளி ஆகட்டுமே…

ஆண் : வாடை தாண்டி கோடை கூட…
தீர்ந்திடாத ஸ்ம் ஸ்ம் நீ…
தூது தந்த தூய நேய…
பூரணத்தின் அம்சம் நீ…
உன்னில் என்னை ஊற்றி ஊற்றி தேற்றினேன்…

பெண் : பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய்…
குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய்…
தத்தி தாவும் தீவாய் எனை செய்தாய்…
நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய்…

—BGM—


Notes : Pathikatha Thee Song Lyrics in Tamil. This Song from The Goat Life (2024). Song Lyrics penned by Snehan. பத்திக்காத தீயாய் பாடல் வரிகள்.


Scroll to Top