தொட்டாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவுஅறிவுValliamma Peraandi

Thodaadha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏ தொட்டாலே தீட்டு படுமா…
நாங்க தொடாத பொருள் எதுவா…

ஆண் : தொடாத தொடாத…
தொடாத இப்ப தொடாத…
வராத வராத…
வராத கிட்ட வராத…

ஆண் : தொடாத தொடாத…
தொடாத இப்ப தொடாத…
வராத வராத…
வராத கிட்ட வராத…

ஆண் : ஈ எறும்பு இனிப்புல பறக்க…
ஈத்தற நான் வயித்துல புறக்க…
சூரியன் தான் சுண்டெலி மறைக்க…
சூத்திரன் நான் சந்ததி முழுக்க…

ஆண் : ஈ எறும்பு இனிப்புல பறக்க…
ஈத்தற நான் வயித்துல புறக்க…
சூரியன் தான் சுண்டெலி மறைக்க…
சூத்திரன் நான் சந்ததி முழுக்க…

ஆண் : இரவும் பகலும் உழைக்குறோமே நாங்க…
ஒரு நாள் மணிய அடிக்கிறமே தாங்க…
இரவும் பகலும் உழைக்குறோமே நாங்க…
ஒரு நாள் மணிய அடிக்கிறமே தாங்க…

ஆண் : அது எவனால…
அடுப்பு வந்ததே இவானால…
உனக்கு உடுப்பு வந்ததே இவானால…
அடுக்குமாடியும் வெளுத்த ஆடையும்…
கருத்த மேனியின் கரையால…
தலமுறையால…
கல்லு கடவுள் ஆனதே அவனாலே…

ஆண் : வடிச்ச சோறு அவ வேர்வ…
படுத்து தூங்க இவ போர்வ…

—BGM—

ஆண் : ஏன்டா கருவுலயே…
கடவுள நெறிக்கிற குரவளயே…
தெருவுல துதிக்கிற முத முறையே…
பரம்ப படிப்புல பழங்கத கலக்குற…

ஆண் : கடவுள செதுக்குன கரங்களையே…
அழுக்குனு ஒதுக்குற அறகுறையே…

ஆண் : நம்மாளு தலமைய கேளு…
தொட்டா தீட்டுன்னு சுத்துற ரீலு…
பக்கா ஷார்ப்பு கத்திரி கோலு…
வித்தய காட்டுறது புத்தரு ஸ்கூலு…

ஆண் : நோட் பண்ணி வச்சிக்கோ…
வேப்பல கச்சிக்கோ…
ரோட்டுல வீட்டுல காட்டுல மேட்டுல…
சோத்துலயும் எங்க மூச்சு…

ஆண் : இனி ஸ்டாப் பண்ணிக்கோ உங்க பேச்ச…
தப்பாட்ட பரம்பர நாங்க தட்டி கேட்குற தலமுறை…
முப்பாட்டன் பொதுமறை…
அத முட்டாப்பயலே முழுங்கிற…

ஆண் : நெருங்காத நொருங்காத…
நெருப்போட இறங்காதே…
பகுத்தறிவு இருக்குது…
என்கொரு தனிக்கத இருக்குது…

ஆண் : ஏய் தெருக்குரல் முழக்குது…
கசடற திருக்குறள் நிலம் இது…
துணையென இயற்கையே இருக்குது…

—BGM—

ஆண் : எங்க அய்யன் சார்பாக…
எங்க அண்ணன் சார்பாக…
என் அக்கா சார்பாக…
என் மக்கா சார்பாக…

ஆண் : என் ஆத்தா சார்பாக…
என் ஆயா சார்பாக…
என் ஆயா சார்பாக…

ஆண் : தொடாத தொடாத…
தொடாத இப்ப தொடாத…
வராத வராத…
வராத கிட்ட வராத…

ஆண் : தொடாத தொடாத…
தொடாத இப்ப தொடாத…
வராத வராத…
வராத கிட்ட வராத…

ஆண் : ஏ தொட்டாலே தீட்டு படுமா…
நாங்க தொடாத பொருள் எதுவா…
பாத்தாலே பாவ தோஷமா…
நாங்க பாக்காத காட்சி எதுவா…


Notes : Thodaadha Song Lyrics in Tamil. This Song from Valliamma Peraandi (2024). Song Lyrics penned by Arivu. தொட்டாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading