பஞ்சு மிட்டாய் சீல கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிதேவாஎட்டுப்பட்டி ராசா

Panju Mittai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பஞ்சு மிட்டாய் சீலை கட்டி…

—BGM—

ஆண் : பட்டுவண்ண ரவிக்கை போட்டு…

—BGM—

ஆண் : அடி பஞ்சு மிட்டாய் சீலை கட்டி…
பட்டுவண்ண ரவிக்கை போட்டு…
கஞ்சி கொண்டு போறவளே…
நெஞ்சுக்குள்ள நீ வரியா…

—BGM—

பெண் : தும்ப பூவு மல்லு வேட்டி…
ஆண் : ஆஹா…
பெண் : தொட தெரிய ஏத்தி கட்டி…
ஆண் : ஓஹோ…

பெண் : வம்பு பண்ண வாறவுகள…
வழி விடுங்க நேரமாச்சு…
ஆண் : அப்டி போடு…

—BGM—

ஆண் : ஏழை புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு…
உன் இடுப்பு கொசுவத்துல…
சூட்சமும் இருக்கு…

ஆண் : நீ நெளிஞ்சு போகையிலே…
நெஞ்சுல சுளுக்கு…

பெண் : வாட காத்தடிச்சு வாட்டுது மாமா…
என் கூட வந்து குச்சுக்குள்ள…
ஒட்டிக்க மாமா…

பெண் : உன் ஊடலுக்கு…
சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா…

ஆண் : உன் கண்ணு ரெண்டும் நவா பழம்…
காச்சு இருக்கு கொய்யா பழம்…
மூடி வைக்காதே…
திங்காம வீணடிக்காதே…

பெண் : அட புல் அறுக்க போகையிலே…
புள்ள வரம் கேட்க வந்தேன்…
தள்ளி நிக்காத…
மனச கிள்ளி வைக்காத…

—BGM—

ஆண் : அடியே பஞ்சு மிட்டாய் சீலை கட்டி…
பெண் : ஹான்…

ஆண் : பட்டுவண்ண ரவிக்கை போட்டு…
கஞ்சி கொண்டு போறவளே…
நெஞ்சுக்குள்ள நீ வாரியா புள்ள…

—BGM—

ஆண் : ஓரஞ்சரம் பார்த்து ஒதுங்கனும் பதமா…
பின்ன ஓட தண்ணிக்குள்ள முங்கி…
குளிக்கணும் சுகமா…

ஆண் : மெல்ல லவகமா…
உன் முதுக தேய்க்கணும் இதமா…

பெண் : மாமா பம்முறீயே…
பொழுதுக்கு மேலே…
நீ கம்மன்கட்டு மூலையிலே…
கல்லணை போலே…

பெண் : நான் ஒத்தையிலதான் வருவேன்…
உன் நினைப்பால…

ஆண் : அட மஞ்ச காட்டு ஓரத்திலே…
மத்தியான நேரத்தில…
காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா…

பெண் : அட வெள்ளைச்சோள சோறு வச்சு…
கார பூவ ஏழரைச்சு…
ஊட்டி விடட்டா…
உனக்கு ஊட்டி விடட்டா…

—BGM—

ஆண் : யே புள்ள… பஞ்சு மிட்டாய் சீலை கட்டி…
பட்டுவண்ண ரவிக்கை போட்டு…
கஞ்சி கொண்டு போறவளே…
நெஞ்சுக்குள்ள நீ வரியா…

—BGM—

பெண் : தும்ப பூவு மல்லு வேட்டி…
தொட தெரிய ஏத்தி கட்டி…
வம்பு பண்ண வாறவுகள…
வழி விடுங்க நேரமாச்சு…

—BGM—


Notes : Panju Mittai Song Lyrics in Tamil. This Song from Ettupatti Rasa (1997). Song Lyrics penned by Kasthuri Raja. பஞ்சு மிட்டாய் சீல கட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading