பளபளக்குற பகலா நீ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன்ஹாரிஸ் ஜெயராஜ்அயன்

Pala Palakkura Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பளபளக்குற பகலா நீ…
படபடக்குற அகலா நீ…
அனல் அடிக்கிற துகளா நீ…
நகலின் நகலா நீ…

ஆண் : மழையடிக்கிற முகிலா நீ…
திணறடிக்கிற திகிலா நீ…
மணமணக்குற அகிலா நீ…
முள்ளா மலரா நீ…

ஆண் : சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை…
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை…
கூட்டைதான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை…
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை…

ஆண் : வானவில்லை போலே இளமையடா…
தினம் புதுமையடா அதை அனுபவிடா…
காலங்காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா…
நீ முன்னே முன்னே வாடா வாடா…

ஆண் : பளபளக்குற பகலா நீ…
படபடக்குற அகலா நீ…
அனல் அடிக்கிற துகளா நீ…
நகலின் நகலா நீ…

ஆண் : மழையடிக்கிற முகிலா நீ…
திணறடிக்கிற திகிலா நீ…
மணமணக்குற அகிலா நீ…
முள்ளா மலரா நீ…

—BGM—

ஆண் : எட்டித்தொடும் வயது இது…
ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்…
அதிசயம் என்னவென்றால்…
அதன் இருபக்கம் கூா் இருக்கும்…

ஆண் : கனவுக்கு செயல் கொடுத்தால்…
அந்த சூாியனில் செடி முளைக்கும்…
புலன்களை அடக்கி வைத்தால்…
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்…

ஆண் : காலில் குத்தும் ஆணி…
உன் ஏணி என்று காமி…
பல இன்பம் அள்ளிசோ்த்து…
ஒரு மூட்டைகட்டி வா நீ வாநீ…

ஆண் : பளபளக்குற பகலா நீ… ஹாஹா…
படபடக்குற அகலா நீ… ஹாஹா…
அனல் அடிக்கிற துகளா நீ…
நகலின் நகலா நீ… ஹே…

ஆண் : மழையடிக்கிற முகிலா நீ… ஹாஹா…
திணறடிக்கிற திகிலா நீ… ஹாஹா…
மணமணக்குற அகிலா நீ…
முள்ளா மலரா நீ…

—BGM—

ஆண் : இதுவரை நெஞ்சிலிருக்கும்…
சில துன்பங்களை நாம் மறப்போம்…
கடிகார முள் தொலைத்து…
தொடு வானம் வரை போய் வருவோம்…

ஆண் : அடைமழை வாசல் வந்தால்…
கையில் குடையின்றி வா நனைவோம்…
அடையாளம்தான் துறப்போம்…
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்…

ஆண் : என்ன கொண்டு வந்தோம்…
நாம் என்ன கொண்டு போவோம்…
அட இந்த நொடி போதும்…
வா வேற என்ன வேண்டும் வேண்டும்…

ஆண் : பளபளக்குற பகலா நீ…
படபடக்குற அகலா நீ…
அனல் அடிக்கிற துகளா நீ…
நகலின் நகலா நீ…

ஆண் : மழையடிக்கிற முகிலா நீ…
திணறடிக்கிற திகிலா நீ…
மணமணக்குற அகிலா நீ…
முள்ளா மலரா நீ…

ஆண் : சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை…
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை…
கூட்டைதான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை…
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை…

ஆண் : வானவில்லை போலே இளமையடா…
தினம் புதுமையடா அதை அனுபவிடா…
காலங்காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா…
நீ முன்னே முன்னே வாடா வாடா…

—BGM—


Notes : Pala Palakkura Song Lyrics in Tamil. This Song from Ayan (2009). Song Lyrics penned by Na. Muthukumar. பளபளக்குற பகலா நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading