அடி படகோட்டும் பட்டம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாசின்னவர்

Padagottum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடி படகோட்டும் பட்டம்மா…
பாட்டொண்ணு கட்டம்மா…
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா…

பெண் : மொரட்டாளு முத்தையா…
வெறும் வாய பொத்தையா…
படபடவென கதகத என கதைக்கிறியா…

ஆண் : இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது…
பெண் : வௌவாலு மீனும்தான் கெடைக்காம போகாது…

ஆண் : அரே ஹோன்னா ஹோஹோய்ன்னா…

பெண் : அட மொரட்டாளு முத்தையா…
வெறும் வாய பொத்தையா…
படபடவென கதகத என கதைக்கிறியா…
ஆண் : சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா…

—BGM—

ஆண் : சிந்தாமணி ஏண்டி பந்தாமணி…
ஏங்கி நிக்காதே…
நெனப்ப தாங்கி நிக்காதே…

பெண் : முத்துமணி ஒன்னச் சுத்தும் மணி…
பாடி வைக்காதே…
மறச்சு மூடி வைக்காதே…

ஆண் : விட்டில் கிளி ஒட்டிப் பேசாதடி…
கிளி தட்டுக்குள்ள வட்டம் போடாதடி…
ஒத்த வழி பக்கம் போகாதடி…
வித்தை எல்லாம் இங்கே வேகாதடி…

பெண் : மொட்டான மொட்டுக்கு…
பட்டான சிட்டுக்கு…
குளுகுளுகுளு என வருகுது பல கனவு…

பெண் : மொரட்டாளு முத்தையா…
வெறும் வாய பொத்தையா…
படபடவென கதகத என கதைக்கிறியா…

ஆண் : அடி படகோட்டும் பட்டம்மா…
பாட்டொண்ணு கட்டம்மா…
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா… ஹாய்…

பெண் : வௌவாலு மீனும்தான் கெடைக்காம போகாது…
ஆண் : இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது…

பெண் : அரே ஹோன்னா ஹோஹோய்ன்னா… ஆஅ…

ஆண் : அடி படகோட்டும் பட்டம்மா…
பாட்டொண்ணு கட்டம்மா…
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா… ஹாய்…
பெண் : படபடவென கதகத என கதைக்கிறியா…

—BGM—

ஆண் : வித்தாரமா என்ன சுத்தாதம்மா…
போட்டு இழுத்தாலும் வலைக்குள் மாட்டிக் கொள்ளாது…

பெண் : முத்தாரம்தான் கொடு அச்சாரமா…
காக்க வெக்காதே…
துணிஞ்சு கேக்க வெக்காதே…

ஆண் : தொட்டா என்ன விரல் பட்டா என்ன…
விட்டா என்ன மனம் கெட்டா என்ன…
ஒட்ட வந்த செல்லச் சிட்டா என்ன…
தொட்டு கட்டிக் கொள்ள பட்டா என்ன…

பெண் : உன்னோட அன்புக்கு…
உள்ளூறும் தெம்புக்கு…
கிறுகிறுகிறு என வருகுது பல கனவு…

ஆண் : அடி படகோட்டும் பட்டம்மா…
பாட்டொண்ணு கட்டம்மா…
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா…

பெண் : மொரட்டாளு முத்தையா…
வெறும் வாய பொத்தையா…
படபடவென கதகத என கதைக்கிறியா…

ஆண் : இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது…
பெண் : வௌவாலு மீனும்தான் கெடைக்காம போகாது…

ஆண் : அரே ஹோன்னா ஹோஹோய்ன்னா…

பெண் : அட மொரட்டாளு முத்தையா…
வெறும் வாய பொத்தையா…
படபடவென கதகத என கதைக்கிறியா…

ஆண் : சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா… ஆ…


Notes : Padagottum Song Lyrics in Tamil. This Song from Chinnavar (1992). Song Lyrics penned by Gangai Amaran. அடி படகோட்டும் பட்டம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading