இரு விழியின் வழியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாசிவா

Iruvizhiyin Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இரு விழியின் வழியே நீயா வந்து போனது…
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…

பெண் : இரு பார்வைகள் பரிமாறிடும்…
மன ஆசைகள் அணை மீறும்…
அணை மீறும் போது காவல் ஏது…

ஆண் : இரு விழியின் வழியே நீயா வந்து போனது…
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…

—BGM—

ஆண் : தொட்டில் இடும் இரு தேமாங்கனி…
என் தோளில் ஆட வேண்டுமே…

பெண் : கட்டில் இடும் உன் காமன் கிளி…
மலர் மாலை சூட வேண்டுமே…

ஆண் : கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு…
தேதி ஒன்று பார்க்கிறேன்…

பெண் : கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்…
தேதி சொல்ல போகிறேன்…

ஆண் : கார் கால மேகம் வரும்…
பெண் : கல்யாண ராகம் தரும்…
ஆண் : பாடட்டும் நாதஸ்வரம்…
பெண் : பார்க்கட்டும் நாளும் சுகம்…

ஆண் : விடிகாலையும் இளமாலையும்…
இடை வேளையின்றி இன்ப தரிசனம்…

பெண் : விழியின் வழியே நீயா வந்து போனது…
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…

ஆண் : இரு பார்வைகள் பரிமாறிடும்…
மன ஆசைகள் அணை மீறிடும்…
அணை மீறும் போது காவல் ஏது…

பெண் : விழியின் வழியே நீயா வந்து போனது…
ஆண் : இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…

—BGM—

ஆண் : உன் மேனியும் நிலைக்கண்ணாடியும்…
ரசம் பூச என்ன காரணம்…

—BGM—

பெண் : ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்…
இதை கேட்பதென்ன நாடகம்…

ஆண் : எங்கே எங்கே ஒரே தரம்…
என்னை உன்னில் பார்க்கிறேன்…

பெண் : இதோ இதோ ஒரே சுகம்…
நானும் இன்று பார்க்கிறேன்…

ஆண் : தென்பாண்டி முத்துக்களா…
பெண் : நீ சிந்தும் முத்தங்களா…
ஆண் : நோகாமல் கொஞ்சம் கொடு…
பெண் : உன் மார்பில் மஞ்சம் இடு…

பெண் : இரு தோள்களில் ஒரு வானவில்…
அது பூமி தேடி வந்த அதிசயம்…

ஆண் : விழியின் வழியே நீயா வந்து போனது…
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…

பெண் : இரு பார்வைகள் பரிமாறிடும்…
மன ஆசைகள் அணை மீறிடும்…
அணை மீறும் போது காவல் ஏது…

—BGM—


Notes : Iruvizhiyin Song Lyrics in Tamil. This Song from Siva (1989). Song Lyrics penned by Pulamaipithan. இரு விழியின் வழியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading