| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பா. விஜய் | அனிருத் ரவிசந்தர் & ஸ்ருதிகா சமுத்திரலா | அனிருத் ரவிசந்தர் | இந்தியன் 2 |
Paaraa Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பாரா…
வருவது ஓராட் படையா…
வீரா…
விழுப்புண் அலங்காரா…
ஆண் : மாறா…
ஆயிரம் உடைவாள் ஒருவன்…
பேரா…
வரிப்புலி வரலாறா…
ஆண் : தினவுள்ள தோள்கள் உண்டு…
தீயைக் கக்கும் வாட்கள் உண்டு…
புரவிக்கு றெக்கை உண்டு…
புயலுக்கும்தான் உருவம் உண்டு…
ஆண் : தொட்டுப்பார் கை நடுங்கும்…
மூச்சடங்கும் இவனைக் கண்டு…
வேட்டைக்கு போகுது பார்…
வேங்கை வெகுண்டு…
ஆண் : என் தாய் மண்மேல் ஆணை…
ஆண் : என் தாய் மண்மேல் ஆணை…
இது தமிழ் மானத்தின் சேனை…
அட வெள்ளை ரத்தம் தொட்டு…
இனி வாளில் ஏற்று சாணை…
ஆண் : என் தாய் மண்மேல் ஆணை…
இது தமிழ் மானத்தின் சேனை…
அட வெள்ளை ரத்தம் தொட்டு…
இனி வாளில் ஏற்று சாணை…
ஆண் : பாரா…
வருவது ஓராட் படையா…
வீரா…
விழுப்புண் அலங்காரா…
ஆண் : மாறா…
ஆயிரம் உடைவாள் ஒருவன்…
பேரா…
வரிப்புலி வரலாறா…
—BGM—
பெண் : கன்னங்கரு இரவு போதாதா நமக்கு…
வெள்ளைக்கார நிலா வான்மீது எதற்கு…
ரத்தக்கறை படிஞ்ச உன் வாளின் முனைக்கு…
முத்தக்கறை ஒன்னு வேணாமா துணைக்கு…
பெண் : உன்னோட காலடி குளம்பாகனும்…
உன்மேல விழும்புண் தழும்பாகனும்…
உன் கையில் சேரும் வரமாகனும்…
இல்ல தாய்மண்ணுக்கே நான் உரமாகனும்…
ஆண் : அடியே வெடியே…
அல்லிக் கொடியின் மடியே உன்ன…
அள்ளி வாசம் பாக்க வரட்டா…
ஆண் : புரியா வலியே செல புலியே புலியே…
உன்மேல் வரிகள் எண்ணி எண்ணி சொல்லட்டா…
ஆண் : துப்பாக்கி தப்பாய்க் கொண்ட…
சிப்பாய்கெல்லாம் சிம்மம் நீயே…
நட்பாகி நேசம் காட்டும்…
குப்பாய்க்கெல்லாம் மகனும் நீயே…
ஆண் : அடிமைகள் ரத்த்திற்கெல்லாம்…
வெப்பம் தந்த வீரத் தீயே…
அதிகார வர்கத்துக்கு அறைகூவல் நீயே…
ஆண் : என் தாய் மண்மேல் ஆணை…
இது தமிழ் மானத்தின் சேனை…
அட வெள்ளை ரத்தம் தொட்டு…
இனி வாளில் ஏற்று சாணை…
ஆண் : என் தாய் மண்மேல் ஆணை…
இது தமிழ் மானத்தின் சேனை…
அட வெள்ளை ரத்தம் தொட்டு…
இனி வாளில் ஏற்று சாணை…
ஆண் : பாரா…
வருவது ஓராட் படையா…
வீரா…
விழுப்புண் அலங்காரா…
ஆண் : மாறா…
ஆயிரம் உடைவாள் ஒருவன்…
பேரா…
வரிப்புலி வரலாறா…
Notes : Paaraa Song Lyrics in Tamil. This Song from Indian 2 (2024). Song Lyrics penned by Pa Vijay. பாரா பாடல் வரிகள்.
