பாலம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஷங்கர் மகாதேவன் & ஸ்வேதா மோகன்அனிருத் ரவிசந்தர்கத்தி

Paalam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏய்… கொட்டு கொட்டு மேளம் கொட்டு…
கட்டு கட்டு பாலம் கட்டு…
இதயத்த இதயத்துக்கு…
இணைக்க பாலம் கட்டு…

—BGM—

பெண் : மார்ஸ்ல இவன் பொறந்தான்…
வீனஸ்ல இவ பொறந்தா…
கிரகங்க இரண்டுத்துக்கும் இருக்கும்…
பாலம் எது…

—BGM—

ஆண் : அடடா… சொர்கத்துல மரம் எடுத்து…
கட்டுன பாலம்தான்…

பெண் : ம்ம்… முத்தத்துல கட்டி வச்ச…
பாலம் காதல் தான்…

குழு (ஆண்கள்) : காதல் ஒரு மிதவை மிதவை பாலம்…
அது இல்லைனா நெஞ்சுக்குள்ள…
மிருகம் மிருகம் வாழும்…

குழு (ஆண்கள்) : காதல் ஒரு மிதவை மிதவை பாலம்…
அது இல்லைனா நெஞ்சுக்குள்ள…
மிருகம் மிருகம் வாழும்…

ஆண் : பேஷ்… பேஷ்…
ரொம்ப நன்னா இருக்கு…

ஆண் & பெண் : அண்டகுல அதிபதி நீயே…
நமோ நமோ நாராயணாய…
தொண்டர் குலம் போற்றும் உன்னயே…
நமோ நமோ நாராயணாய…

ஆண் : ஓ… ஓஹோ… துன்பம் இங்க ஒரு கரை தான்…
இன்பம் அங்க மறுகரை தான்…
ரெண்டுக்கும் மத்தியில…
ஓடும் பாலம் எது…

பெண் : ஓ… ஓஹோ… கோவிலுல கல் எடுத்து…
பக்தியில சொல் எடுத்து…
கட்டின பாலம் எது…
சாமி பாலம் அது…

ஆண் : ஓ… ஓ… பாவம் செஞ்ச கறை கழுவ…
நினைக்கும் பூமிதான்…

பெண் : பாவத்தை நீ உணர்ந்துபுட்டா…
நீயும் சாமிதான்…

குழு (ஆண்கள்) : சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்…
அது இல்லேனா…
பூமி இங்கே கிறுக்கு கிறுக்கு கோலம்…

குழு (ஆண்கள்) : சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்…
அது இல்லேனா…
பூமி இங்கே கிறுக்கு கிறுக்கு கோலம்…

—BGM—

பெண் : ஏ… நேத்து வெறும் இருள்மயம் தான்…
நாளை அது ஒளிமயம் தான்…
நல்ல எதிர்காலத்துக்கு…
போகும் பாலம் எது…

ஆண் : ஓ… ஓஹோ… குறும்புல இரும்பெடுத்து…
அறிவுல நரம்பெடுத்து…
எழுப்புன பாலம் எது…
குழந்தை பாலம் அது…

பெண் : ஓ… ஓஹோ… வானத்துல மீன் பிடிச்சு…
ரசிக்கும் வயசுதான்…

ஆண் : எல்லாருக்கும் வேணும் அந்த…
குழந்தை மனசுதான்…

குழு (ஆண்கள்) : குழந்தைங்க கனவு கனவு பாலம்…
அதில் போனாலே…
கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்…

குழு (ஆண்கள்) : குழந்தைங்க கனவு கனவு பாலம்…
அதில் போனாலே…
கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்…

—BGM—

குழு (ஆண்கள்) : குத்துகல்ல போல நின்னானே…
புட்டு கின்னு போயேபுட்டானே…
எட்டு காலு பூச்சியாட்டம் தான்…
நாசமாயி நடந்து வரானே…

ஆண் : ஹே… பொறப்பதும் ஒரு நொடிதான்…
இறப்பதும் ஒரு நொடிதான்…
சொல்லடி ஞானபொண்ணு…
ரெண்டுக்கும் பாலம் எது…

பெண் : அஞ்சு மூட்ட பூவெடுத்து…
நெறத்துல நாரெடுத்து…
கட்டுன பாலம் எது…
வாழ்க்க பாலம் அது…

ஆண் : பாதையில முள்ளிருக்கும்…
குத்துனா கத்தாதே…

பெண் : பீர் அடிச்சி நின்னா கூட…
அதுவும் கத்தாதே…

ஆண் : வாழ்க்க அது பூவுல கட்டுன பாலம்…
நீ செத்தாலும்…
சோ்த்து வச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும்…

ஆண் : வாழ்க்க அது பூவுல கட்டுன பாலம்…
நீ செத்தாலும்…
சோ்த்து வச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும்…

—BGM—


Notes : Paalam Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Madhan Karky. பாலம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading