நீ யாரோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.ஜே. யேசுதாஸ் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்கத்தி

Nee Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

ஆண் : ஊர் செய்த தவமோ…
இந்த ஊர் செய்த தவமோ…
மண்ணை காப்பாற்றிடும் இவன் ஆதி சிவன்…

ஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே…
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…
யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

BGM

ஆண் : கை வீசும் பூங்காத்தே…
நீ எங்கு போனாயோ…
யார் என்று சொல்லாமல்…
நிழல் போல நடந்தாயோ…

ஆண் : முறை தான் ஒரு முறை தான்…
உன்னை பார்த்தல் அது வரமே…
நினைத்தால் உன்னை நினைத்தால்…
கண்ணில் கண்ணீர் மழை வருமே…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…
யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

ஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே…
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…

குழு (ஆண்கள்) : நீ யாரோ…

ஆண் : இன்பம் தந்த கண்ணீரோ…

குழு (ஆண்கள்) : கண்ணீரோ…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…

குழு (ஆண்கள்) : கண்ணீரோ…

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

BGM


Notes : Nee Yaaro Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Pa Vijay. நீ யாரோ பாடல் வரிகள்.


Scroll to Top