பாக்காத என்ன பாக்காத

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுமங்கலி & திப்புதேவி ஸ்ரீ பிரசாத்ஆறு

Paakatha Enna Paakatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

ஆண் : கொடுத்தத திருப்பி நீ கேட்க…
காதலும் கடனுமில்ல…
கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள…
நடப்பது கூத்துமில்ல…

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

BGM

ஆண் : வேணா வேணாணு நான் இருந்தேன்…
நீதானே என்ன இழுத்துவிட்ட…
போடி போடின்னு நான் துரத்த…
வம்புல நீதானே மாட்டிவிட்ட…

ஆண் : நல்லா இருந்த என் மனச…
நாராக கிழிச்சிப்புட்ட…
கறுப்பா இருந்த என் இரவ…
கலரா மாத்திப்புட்ட…

ஆண் : என்னுடன் நடந்த என் நிழல…
தனியா நடக்கவிட்ட…
உள்ள இருந்த என் உசுர…
வெளிய மிதக்கவிட்ட…

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

BGM

பெண் : வேணா வேணாண்ணு நினைக்கலையே…
நானும் உன்ன வெறுக்கலையே…
காணும் காணும்ணு நீ தேட…
காதல் ஒன்னும் தொலையலையே…

பெண் : ஒன்னா இருந்த ஞாபகத்த…
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்…
தனியா இருக்கும் வலிய மட்டும்…
தனியா அனுபவிச்சேன்…

பெண் : பறவையின் சிறகுகள் விரிஞ்சால்தான்…
வானத்தில் அது பறக்கும்…
காத்திருந்தால்தான் இருவருக்கும்…
காதல் அதிகரிக்கும்…

பெண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

பெண் : கொடுத்தத திருப்பி நான் கேட்க…
கடனா கொடுக்கலையே…
உனக்குள்ளதானே நான் இருக்கேன்…
உனக்கது புரியலையே…

BGM


Notes : Paakatha Enna Paakatha Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. பாக்காத என்ன பாக்காத பாடல் வரிகள்.


Scroll to Top