ஒட்டியாணம் செஞ்சு தாரேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஸ்ரீ மதுமிதாஹாரிஸ் ஜெயராஜ்அருள்

Ottaiyanum Song Lyrics in Tamil


—BGM—

குழு : கவ்விகிச்சு லவ்வு…
கவ்விகிச்சு லவ்வு…

ஆண் : ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா…
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா…

—BGM—

ஆண் : ஹோய்… ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா…
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா…

பெண் : ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா…
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா…

ஆண் : மூக்கு முழி உள்ளவளே…
முத்தத்துக்கு நல்லவளே…
மாரளவு நான் எடுத்து…
முத்து மாலை தரவா…

பெண் : முச்சத்துல உள்ளவனே…
மச்சம் உள்ள மன்மதனே…
மாரளவு எடுக்கையிலே…
ஓரளவு தொடவா…

ஆண் : வெள்ளி குடமே…
தங்க வடமே…
இந்த சீயான் பக்கம் திரும்பு…

பெண் : சந்து கெடைச்சா…
பந்து அடிப்ப…
இது கோயம்பத்தூர் குறும்பு…

ஆண் : ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா…
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா…

பெண் : ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா…
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா…

—BGM—

ஆண் : சுத்த தங்கம் பத்த வச்சு…
நட்சத்திர கல்லு வச்சு…
நெத்தி சுட்டி பண்ணி தாரேன்…
என்ன சுத்தி சுத்தி வாரியா…

பெண் : நெத்தி சுட்டி தேவையில்ல…
நீல கல்லும் தேவையில்ல…
நெத்தியில குங்குமத்த…
நீ வச்சிவிட வாரியா…

ஆண் : உன் கத்தி மூக்கோட முத்து மூக்குத்தி…
குத்தி விட போறேன் வாரியா…

பெண் : உன் முத்து மூக்குத்தி உப்புகாகாது…
மூக்கில் மூக்குரச வாரியா…

ஆண் : தங்க தோடு நான் தாரேன்…
அங்கத்தோடு நீ வாரியா…

பெண் : தோடு போடும் காதோடு…
மூர்த்த செய்தி சொல்லையா…

ஆண் :ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா…
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா…

பெண் : ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா…
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா…

—BGM—

ஆண் : வெள்ளி கட்டி வெட்டி தட்டி…
சல்லி சல்லி மானு கட்டி…
கொலுசுங்க பண்ணி தாரேன்…
என் கூட மாடா வாரியா…

பெண் : கூட மாடா வாரதுக்கு…
கொலுசுகள் தேவை இல்ல…
நீ கெண்ட காலு நண்டு போல…
உன் சுண்டு விரல் தேயும்மையா…

ஆண் : அடி வஞ்சி உன் கையில் கொஞ்சி விளையாட…
வளையல் நான் தாரேன் வாரியா…

பெண் : அட வளையல் வேண்டாமே…
இப்ப வருவேனே…
வலது கை கொஞ்சம் தாரியா…

ஆண் : தங்க செயினு நான் தாரேன்…
தம்மா துண்டு நீ தாரியா…

பெண் : மஞ்ச கயிறு நீ தந்தா…
என்னை உரிச்சு தாரேன்யா…

ஆண் : ஒட்டியாணம் ஒட்டியாணம் ஒட்டியாணம்…
அத செஞ்சு தாரேன் செஞ்சு தாரேன் வரியா…

பெண் : டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா…
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா…

ஆண் : மூக்கு முழி உள்ளவளே…
பெண் : ஹோய்…
ஆண் : முத்தத்துக்கு நல்லவளே…
பெண் : ஹோய்…
ஆண் : மாரளவு நான் எடுத்து…
முத்து மாலை தரவா…
ஆண் : ஹோய்…

பெண் : முச்சத்துல உள்ளவனே…
ஆண் : ஹோய்…
பெண் : மச்சம் உள்ள மன்மதனே…
ஆண் : ஹோய்…
பெண் : மாரளவு எடுக்கையிலே…
ஓரளவு தொடவா…

ஆண் : வெள்ளி குடமே…
தங்க வடமே…
இந்த சீயான் பக்கம் திரும்பு…

பெண் : சந்து கெடைச்சா…
பந்து அடிப்ப…
இங்கு வேணாம் வேணாம் குறும்பு…

—BGM—


Notes : Ottaiyanum Song Lyrics in Tamil. This Song from Arul (2004). Song Lyrics penned by Vairamuthu. ஒட்டியாணம் செஞ்சு தாரேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading