ஒத்தப்பட வெறியாட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சூப்பர் சுபுசாம், வேலு, அரவிந்த் & செண்பகராஜ்யுவன் ஷங்கர் ராஜாகருடன்

Othapada Veriyattam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெறியாட்டம்…

ஆண் : ஒத்தப்பட வெறியாட்டம்…
வச்சேன் பொறி நரியாட்டம்…
சிக்கிக்குவே எலியாட்டம்…
களையெல்லாம் புடுங்குற நேரமே…

ஆண் : அச்சத்துல அடையாளம்…
ரத்தத்துல வெகுமானம்…
எத்திக்கிலும் பலி தானம்…
பகையத்தான் நொறுக்குற காலமே…

ஆண் : முறிக்கிட்டு அலையாதே… ஹே ஹே ஹே…
வெதச்சத அறுக்காம…

ஆண் : முறிக்கிட்டு அலையாதே…
சும்மா மொறச்சிட்டு திரியாதே…
வெதச்சத அறுக்காம…
இந்த ரணகளம் முடியாதே…

ஆண் : குட்டப் பாத்தா கொதறிடும்…
சுட்டுப் போட்டா சிதறிடும்…
மொத்தக் கூட்டம் கதறிடும்…
அடுத்தது நீதானே…

ஆண் : முறிக்கிட்டு அலையாதே…
சும்மா மொறச்சிட்டு திரியாதே…
வெதச்சத அறுக்காம…
இந்த ரணகளம் முடியாதே…

ஆண் : ஒத்தப்பட வெறியாட்டம்…
வச்சேன் பொறி நரியாட்டம்…
சிக்கிக்குவே எலியாட்டம்…
களையெல்லாம் புடுங்குற நேரமே…

ஆண் : அச்சத்துல அடையாளம்…
ரத்தத்துல வெகுமானம்…
எத்திக்கிலும் பலி தானம்…
பகையத்தான் நொறுக்குற காலமே…

BGM

ஆண் : தெனாவட்டா தொட்டுப்புட்ட வீணா…
அனாமத்தா அட்டுக்கிட்ட நீனா…
ஒண்ணுமண்ணா இருந்த ஒறவத்தான்…
பொதச்சவன் நீதானே…

ஆண் : அக்கம் பக்கம் கத்தி எங்க பாயும்…
அவன் இவன் எவன் கண்ணு மேயும்…
சுத்தும் முத்தும் ஏன்டா பாக்குற…
செதச்சவன் நான்தானே…

ஆண் : தன்மானத்த சோதிச்சாலே…
விஸ்வாசத்தப் பாதிக்கும்…
காலச் சுத்தும் நாயும் கூட…
கல் அடிச்சா கர்ஜிக்கும்…

ஆண் : வத்திப் போன காட்டுல…
வத்திக்குச்சிய கிழிச்சுட்டே…
பொறி போதும் பழி தீரும்…
வெறியடங்கும் தீ அடங்காதே…

ஆண் : முறிக்கிட்டு அலையாதே…
சும்மா மொறச்சிட்டு திரியாதே…
வெதச்சத அறுக்காம…
இந்த ரணகளம் முடியாதே…

BGM


Notes : Othapada Veriyattam Song Lyrics in Tamil. This Song from Garudan (2024). Song Lyrics penned by Super Subu. ஒத்தப்பட வெறியாட்டம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading