ஒரு பௌர்ணமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Oru Pournami Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

ஆண் : இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம்…
நீதான் கண்காட்சி…
நீ சேலை சூடி சாலை ஓரம்…
ஓடும் நீர் வீழ்ச்சி…

பெண் : ஹோ ஓஓ… மலரே அழகே…
துள்ளி வரும் தென்றல் காற்றே…
நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி…
எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன்…
சேற்று விடு ஆசை கூட்டில்…
புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே…

ஆண் : ஓ… ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

—BGM—

பெண் : சொல்லாத காதல்…
சொல்ல வந்த போது…
சொல்லெல்லாம் காணாமல்…
ஏன் போகுதோ…

ஆண் : யார் நெஞ்சிலேதான்…
காதல் என்பதில்லை…
ஆனால் என்ன எல்லாமே…
பூ பூக்குதோ…

பெண் : கார்காலம்தான் காதல்…
அது வந்தால் இன்பம் செய்யும்…

ஆண் : போர் காலம்தான் காதல்…
அது வந்தால் இம்சை செய்யும்…

பெண் : அலை வந்து ஏதோதான் சொல்கிறது…
ஆண் : கரை அதை கேட்காமல் செல்கிறது…

பெண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

—BGM—

ஆண் : ஆகாய மேகம்…
உன் மீது போகும்…
போகும் போது…
லேசாக தேன் தூவுமே…

பெண் : நான் தேடும் மேகம்…
என்னை வந்து சேர்ந்தால்…
தெய்வம் வந்து…
என் வாழ்வை தாலாட்டுமே…

ஆண் : பெண் பூவே…
உன் வாழ்க்கை…
ஒரு சொர்க்கம் என்றே மாறும்…

பெண் : என் ஆசை கை சேர்ந்தால்…
உன் வார்த்தை உண்மையாகும்…

ஆண் : உனக்கென்ன நீ இங்கே…
வைர விழா…
என்னைகாண வானம்தான்…
அருகினிலா…

பெண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

ஆண் : இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம்…
நீதான் கண்காட்சி…
நீ சேலை சூடி சாலை ஓரம்…
ஓடும் நீர் வீழ்ச்சி…

பெண் : ஹோ ஓஓ…
ஆண் : மலரே அழகே…

பெண் : துள்ளி வரும் தென்றல் காற்றே…
நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி…

ஆண் : எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன்…
சேற்று விடு ஆசை கூட்டில்…

பெண் : புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே…

—BGM—


Notes : Oru Pournami Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Kalaikumar. ஒரு பௌர்ணமி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading