ஒரு பட்டாம்பூச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன் & கே.ஜே யேசுதாஸ் இளையராஜாகாதலுக்கு மரியாதை

Oru Pattampoochi Song Lyrics in Tamil

BGM

ஆண்: ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

ஆண்: காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே…
வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே…
அட காதல் இதுதானா…

குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா…
பூ இங்கே நீதானம்மா…
அடி கல்யாண ஊா்கோலமா…
இனி எப்போதும் காா்காலமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

BGM

ஆண் : ஏனோ மனது…
உன்னை கண்ட பொழுது…
காற்றில் ஒரு மேகமென ஆச்சு…

பெண் : ஏனோ எனக்கு…
காதல் வந்த பிறகு…
கண்ணாம்மூச்சி ஆடும் கதை ஆச்சு…

ஆண் : உன்னை அழைத்தவன் நானே நானே…
தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன்…

பெண் : கூண்டு கிளி இங்கு நானே நானே…
விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்…

ஆண் : உன் சேலை நூலாகவா…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

ஆண் : நான் உன் கூந்தல் பூவாகவா…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

ஆண் : அடி நான் இன்று நீ ஆகவா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே…

BGM

ஆண் : பூவான என் நெஞ்சம் போராட…
தூங்காத கண்ணோடு நீராட…

பெண் : உறவான நிலவொன்று சதிராட…
கடிதங்கள் வாராமல் உயிா் வாட…
அஞ்சலகம் எங்கு என்று தேடுகின்றேன் நான்…

குழு (பெண்கள்) : பூஞ்சோலை நீதானம்மா…
ஒரு பூ சிந்த பிடிவாதமா…
மௌனங்கள் மொழியாகுமா…

BGM

பெண் : காதல் மனசு தத்தளிக்கும் வயசு…
எப்பொழுது ஜன்னல் எட்டி பாா்க்கும்…

ஆண் : ராத்திாி பொழுதும் பௌா்ணமி நிலவும்…
என் மனதை சுட்டு விட்டு போகும்…

பெண் : தனிமைகள் என்னை தொடுமே தொடுமே…
பனித்துளி என்னை சுடுமே சுடுமே…

ஆண் : தாகம் கொண்ட தங்க குடமே குடமே…
அள்ளித்தர கங்கை வருமே வருமே…

பெண் : மேகங்கள் தேனூற்றுமே…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

பெண் : புது மொட்டுக்கள் பூவாகுமே…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

பெண் : ஒரு பூமாலை தோள் சேருமே…

ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

பெண் : காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே…
வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே…
அட காதல் இதுதானா…

குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா…
பூ இங்கே நீதானம்மா…
அடி கல்யாண ஊா்கோலமா…
இனி எப்போதும் காா்காலமா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

Notes : Oru Pattampoochi Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு பட்டாம்பூச்சி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading