கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஃபெபி & அட அலி அசாத்பரத்வாஜ்காதல் மன்னன்

Kanni Pengal Nenjukkul Song Lyrics in Tamil


BGM

பெண் : கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்…

குழு (ஆண்கள்) : கையெழுத்து போட்டவன்…

பெண் : பத்துபேர்கள் மத்தியில்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : பளிச்சென்று உள்ளவன்…

பெண் : அழுக்கு சட்டை போட்டாலும்…

குழு (ஆண்கள்) : அழகாய் தோன்றும் ஆணழகன்…

பெண் : பெண்ணின் பின்னால் சுற்றாமல்…

குழு (ஆண்கள்) : பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ… ஓ ஓ…

பெண் : கல்வி இல்லா கண்ணியரும்…
கடிதம் எழுத செய்கிறவன்…
காதலித்த பெண் மனதில்…
கல்லை எறிந்து போகிறவன் எவனோ…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…
காதல் மன்னன்… காதல் மன்னன்…

BGM

பெண் : சுவர் எல்லாம் பெண்கள் ஒட்டி தொட்டு பார்க்கும் வயசு…
உறவாடும் கனவை கண்டு உச்சி கொட்டும் உதடு…
ரதி தேவி பேத்தி போல மனைவி தேடும் மனசு…
எதிர் வீட்டை அத்தை வீடாய் எண்ணி பார்க்கும் வயசு…

பெண் : சின்ன பெண்கள் இடையே…
சிக்கி கொண்ட போதும்…
அலைகள் முட்டும் பாறை போல…
அசையாதுள்ள வீரன் எவனோ…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…

BGM

பெண்: முன்னால் மலர்கள் என்று ஒரு போதும் இல்லை…
முன்னால் இளமை ஒன்று வர போவதும் இல்லை…
நம் நாட்டில் மக்கள் தொகை தொண்ணூற்றாறு கோடி…
அழகான பெண்கள் மட்டும் ஐம்பத்தாறு கோடி…

பெண்: இதில் பெண்கள் வந்து கண்கள் வைப்பவன் யாரோ…
அவன் பேரை கேளுங்கள்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…

BGM

பெண் : மதம் என்ன ஜாதி என்ன…

குழு (ஆண்கள்) : மறந்து போனோம் நாங்கள்…

பெண் : பல ஊரு பறவைக்கெல்லாம்…

குழு (ஆண்கள்) : இதுதான் வேடந்த்தாங்கள்…

பெண் : உணவொடு பசியை கூட…

குழு (ஆண்கள்) : பகிர்ந்து கொள்வோம் நாங்கள்…

பெண் : கிழமை தேதி பார்ப்பதும் இல்லை…

குழு (ஆண்கள்) : நகரும் எங்கள் நாட்கள்…

பெண் : எதுவும் இல்லை கையில் எல்லாம் உள்ளது நெஞ்சில்…
நாளை எந்தன் காலம் என்று பாடல் பாடும் காளை எவனோ…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…

பெண் : கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்…
கையெழுத்து போட்டவன்…
பெண்ணின் பின்னால் சுற்றாமல்…
பெண்ணே சுற்றும் பேரழகன்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…
காதல்மன்னன்… காதல் மன்னன்…

BGM

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…


Notes : Kanni Pengal Nenjukkul Song Lyrics in Tamil. This Song from Kaadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading