ஆனந்த குயிலின் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே. எஸ். சித்ரா & மலேசியா வாசுதேவன் இளையராஜாகாதலுக்கு மரியாதை

Aanantha Kuyilin Pattu Song Lyrics in Tamil


ஆண்: ஆனந்த குயிலின் பாட்டு…
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…

—BGM—

ஆண்: ஆனந்த குயிலின் பாட்டு…
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…
பூக்களில் நனையும் காற்று…
தினம் எங்களின் தோட்டத்திலே…
கிளிகளின் கூண்டுக்குள்ளே…
புது உலகம் பிறந்ததே…
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே…
ஒரு வானம் விாிந்ததே…
கனிகள் தித்திப்பா…
கவிதை தித்திப்பா…
அது அன்பை விட தித்திப்பா…

பெண்: ஆனந்த குயிலின் பாட்டு…
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…
பூக்களில் நனையும் காற்று…
தினம் எங்களின் தோட்டத்திலே…

—BGM—

ஆண்: பூமி எங்கும் கண்டதில்லை…
பாசத்தை உன் போலே…
பெண்: வேறெதுவும் தேவை இல்லை…
அன்புக்கு முன்னாலே…

—BGM—

ஆண்: நெஞ்சுக்குள்ளே பூ மலரும்…
வீட்டுக்குள் வந்தாலே…
பெண்: நிம்மதியில் கண் வளரும்…
பாட்டுக்கள் தந்தாலே…

—BGM—

ஆண்: இந்த சொந்தங்கள் போதுமே…
எங்கள் இன்பங்கள் கூடுமே…
பெண்: அன்பென்னும் தீபம் ஏற்றிய…
வீடும் தெய்வத்தின் ஆலயம்தான்…
ஆண்: வீடு என்றால் மோட்சம் என்றால்…
வீடு கண்டோம் நேசத்திலே…

—BGM—

பெண்: அன்பினிலே அன்பினிலே…
ஆலயம் கண்டேனே…
அண்ணன்களின் கைகளிலே….
தீபமும் நான் தானே…

—BGM—

ஆண்: பாசத்திலே வாசம் தரும்…
பூவனம் நீதானே…
நேசத்திலே ராகம் தரும்…
வீணையும் நீதானே…

—BGM—

பெண்: சிலா் வேதம் பாடலாம்
சிலா் கீதை தேடலாம்…
நான் கண்டவேதம்…
நான் கண்ட கீதை…
அண்ணனின் வாா்த்தைகள் தான்…

ஆண்: வானில் நிலா தேய்ந்திடலாம்…
பாச நிலா தேய்ந்திடுமோ…
பெண்: ஆனந்த குயிலின் பாட்டு…
ஆண்: தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…
பெண்: பூக்களில் நனையும் காற்று…
ஆண்: தினம் எங்களின் தோட்டத்திலே…

பெண்: கிளிகளின் கூண்டுக்குள்ளே…
புது உலகம் பிறந்ததே…
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே…
ஒரு வானம் விாிந்ததே…

ஆண்: கனிகள் தித்திப்பா…
கவிதை தித்திப்பா…
அது அன்பை விட தித்திப்பா…

ஆண் & பெண்: ஆனந்த குயிலின் பாட்டு…
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…
பூக்களில் நனையும் காற்று…
தினம் எங்களின் தோட்டத்திலே…


Notes : Aanantha Kuyilin Pattu Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆனந்த குயிலின் பாட்டு பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading