ஒரு மாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முருகன் மந்திரம்சோனா மொஹபத்ராஎஸ்.எஸ்.குமரன்தேநீர் விடுதி

Oru Maalai Pozhuthil Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஒரு மாலைப் பொழுதில்…
நான் உன்னைப் பார்த்தேன்…
உன்னைப் பார்த்தே அன்பே…
நான் என்னைப் பார்த்தேன்…

பெண் : உறங்காமல் உன்னைக் காண்கிறேன்… ஓ…
உனக்காக உயிர் வாழ்கிறேன்… ஓ…

பெண் : ஒரு மாலைப் பொழுதில்…
நான் உன்னைப் பார்த்தேன்…
உன்னைப் பார்த்தே அன்பே…
நான் என்னைப் பார்த்தேன்…

—BGM—

பெண் : அதிகாலை நினைவுகள் அழைக்கும்…
அணையாமல் நெருப்பெனக் கொதிக்கும்…
உன் காதல் ஞாபக மழை வந்து அணைக்கும்…

பெண் : அடங்காத ஆசைகள் இருக்கும்…
ஆனாலும் மௌனங்கள் தடுக்கும்…
என் காதல் நதியில் இலையென தவிக்கும்…

பெண் : இதுதான் உயிர் காதலா…
உயிரில் வரும் மோதலா…
நெஞ்சே நான் உள்ள வரையில்…
உன்னை சுமப்பேன் இதயத்தின் அறையில்…

பெண் : ஒரு மாலைப் பொழுதில்…
நான் உன்னைப் பார்த்தேன்…

—BGM—

பெண் : என்னை தேடி தேர் வந்த வேளை…
வழி மாறிப் போனது பாதை…
புரியாமல் கண்ணனை பிரிந்தாள் ராதை…

பெண் : இடி மோதி இதயத்தில் வாதை…
இதுதாமோ காதலின் கீதை…
வருவேன் உன் கோகுல தோட்டத்தில் நாளை…

பெண் : மெதுவாய் என்னை வறுட வா…
தொட்டு முழுதாய் என்னை திருட வா…

பெண் : நீதான் என் உயிர் நீதான்…
இனி நீதான் என் உயிர் நீதான்…

பெண் : ஒரு மாலைப் பொழுதில்…
நான் உன்னைப் பார்த்தேன்…
உன்னைப் பார்த்தே அன்பே…
நான் என்னைப் பார்த்தேன்…

—BGM—


Notes : Oru Maalai Pozhuthil Song Lyrics in Tamil. This Song from Theneer Viduthi (2011). Song Lyrics penned by Murugan Manthiram. ஒரு மாலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading