அப்பா உன் கைய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிகரிசல் கருணாநிதிகரிசல் கருணாநிதிஆல்பம் சாங்ஸ்

Appa Un Kaiya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அப்பா கையை புடிச்சி நடந்தா…
தெரு அழகாக‌ மாறும்…
அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது…
மீசமுடி கீறும்…

ஆண் : பாக்கதான் ஆளு கொஞ்சம் அழுக்காக‌ இருப்பாரு…
பிச்சிப்பூவ போலதான் எங்கப்பா சிரிப்பாரு…
பாக்கதான் ஆளு கொஞ்சம் அழுக்காக‌ இருப்பாரு…
பிச்சிப்பூவ போல தான் எங்கப்பா சிரிப்பாரு…

ஆண் : அப்பா கையை புடிச்சி நடந்தா…
தெரு அழகாக‌ மாறும்…
அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது…
மீசமுடி கீறும்…

—BGM—

ஆண் : மேல்சட்ட போட்டதில்ல…
கால் செருப்பும் கேட்டதில்ல‌…
பாய் விரிச்சி படுத்ததில்ல…
பட்டகடனால் தூங்கம்வல்ல‌…

ஆண் : மேல்சட்ட போட்டதில்ல…
கால் செருப்பும் கேட்டதில்ல‌…
பாய் விரிச்சி படுத்ததில்ல…
பட்டகடனால் தூங்கம்வல்ல‌…

ஆண் : உப்பு முட்ட தூக்கிகிட்டு…
ஊர்ஊரா நடப்பாரு…
உறங்கினாலும் எழுப்பிவிட்டு…
திண்பன்டம் தான் கொடுப்பாரு…

ஆண் : உப்பு முட்ட தூக்கிகிட்டு…
ஊர்ஊரா நடப்பாரு…
உறங்கினாலும் எழுப்பிவிட்டு…
திண்பன்டம்தான் கொடுப்பாரு…

ஆண் : தலைக்கு எண்ண தேய்ச்சதில்ல…
கண்ணாடிய பாத்ததில்ல‌…
தலைக்கு எண்ண தேய்ச்சதில்ல…
கண்ணாடிய பாத்ததில்ல‌…

ஆண் : அவர் உழச்சி உழச்சி காய்ச்சதுல…
உள்ளங்கையில் ரேகையில்ல‌…

ஆண் : அப்பா கையை புடிச்சி நடந்தா…
தெரு அழகாக‌ மாறும்…
அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது…
மீசமுடி கீறும்…

—BGM—

ஆண் : சித்திரம் போல் அம்மாவ…
பத்திரமா பாப்பாரு…
வாக்கப்பட்டு மக போக…
தெம்பி தெம்பி அழுவாரு…

ஆண் : சித்திரம் போல் அம்மாவ…
பத்திரமா பாப்பாரு…
வாக்கப்பட்டு மக போக…
தெம்பி தெம்பி அழுவாரு…

ஆண் : காய்ச்ச வந்து படுத்தாலும்…
மாத்திரதான் திண்பதில்ல‌…
நல்ல சோறு ஒருநாளும்…
எங்கப்பா உண்டதில்ல‌…

ஆண் : காய்ச்ச வந்து படுத்தாலும்…
மாத்திரதான் திண்பதில்ல‌…
நல்ல சோறு ஒருநாளும்…
எங்கப்பா உண்டதில்ல‌…

ஆண் : கைநீட்டி கேட்டாக்கா…
கடமுழுதும் வாங்கி தருவாரு…
கைநீட்டி கேட்டாக்கா…
கடமுழுதும் வாங்கி தருவாரு…

ஆண் : அவரு காசு பணத்த தேடி தேடி…
கருப்படைஞ்சி போனாரு…

ஆண் : அப்பா கையை புடிச்சி நடந்தா…
தெரு அழகாக‌ மாறும்…
அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது…
மீசமுடி கீறும்…


Notes : Appa Un Kaiya Song Lyrics in Tamil. This Song from Album Songs (2018). Song Lyrics penned by Ekadesi. அப்பா உன் கைய பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading