பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | சதீஷ் சக்ரவர்த்தி & ஸ்ரேயா கோஷல் | சதீஷ் சக்ரவர்த்தி | லீலை |
Oru Kili Oru Kili Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…
ஆண் : உனக்குள் நான் வாழும்…
விவரம் நான் கண்டு…
வியக்கிறேன் வியர்க்கிறேன்…
பெண் : எனக்கு நான் அல்ல…
உனக்குதான் என்று உணர்கிறேன்…
ஆண் : நிழல் என தொடர்கிறேன்…
ஆண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…
—BGM—
பெண் : விழி அல்ல விரல் இது…
ஓர் மடல்தான் வரைந்தது…
உயிர் அல்ல உயில் இது…
உனக்குதான் உரியது…
ஆண் : இமைகளின் இடையில் நீ…
இமைப்பதை நான் தவிர்க்கிறேன்…
விழிகளின் வழியில் நீ…
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்…
பெண் : காதல்தான் எந்நாளும் ஒரு…
வார்த்தைக்குள் வராதது…
ஆண் : காலங்கள் சென்றாலும் அந்த…
வானம் போல் விழாதது…
ஆண் : ஒரு கிளி ஒரு கிளி…
பெண் : சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…
—BGM—
ஆண் : தூரத்து மேகத்தை…
துரத்தி செல்லும் பறவை போலே…
தோகையே உன்னை நான்…
தேடியே வந்தேன் இங்கே…
பெண் : பொய்கையை போல் கிடந்தவள்…
பார்வை என்னும் கல் எறிந்தாய்…
தங்கினேன் உன் கையில்…
வழங்கினேன் இன்றே…
ஆண் : தோழியே உன் தேகம் இளம்…
தென்றல்தான் தொடாததோ…
பெண் : தோழனே உன் கைகள் தொட…
நாணம்தான் விடாததோ…
பெண் : ஒரு கிளி ஒரு கிளி…
ஆண் : சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…
பெண் : உனக்குள் நான் வாழும்…
விவரம் நான் கண்டு…
வியக்கிறேன் வியர்க்கிறேன்…
ஆண் : எனக்கு நான் அல்ல…
உனக்குதான் என்று உணர்கிறேன்…
பெண் : நிழல் என தொடர்கிறேன்…
ஆண் & பெண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…
—BGM—
Notes : Oru Kili Oru Kili Song Lyrics in Tamil. This Song from Leelai (2012). Song Lyrics penned by Vaali. ஒரு கிளி ஒரு கிளி பாடல் வரிகள்.