ஒரு அறை உனது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரையாசின் நிசார் & சனா மொயுட்டிஜிப்ரான்மாறா

Oru Arai Unathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

ஆண் : ஒரு முனை உனது…
ஒரு முனை எனது…
இருவரின் துருவம் இணைந்திடுமா…

ஆண் : ஒரு முகில் உனது…
ஒரு முகில் எனது…
இடையினில் நிலவு கடந்திடுமா…

ஆண் : ஒரு கதை உனது…
ஒரு கதை எனது…
விடுகதை முடியுமா…

ஆண் & பெண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் & பெண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

BGM

ஆண் : வண்ணம் நூறு வாசல் நூறு…

ஆண் & பெண் : கண் முன்னேக் காண்கின்றேன்…

ஆண் : வானம்பாடிப் போலே மாறி…

ஆண் & பெண் : எங்கேயும் போகின்றேன்…

ஆண் : வானத்துக்கும் மேகத்துக்கும்…
ஊடே உள்ள வீடொன்றில்…
யாரும் வந்து ஆடிப் போகும்…
ஊஞ்சல் வைத்த என் முன்றில்…

ஆண் & பெண் : போகும் போக்கில்…
போர்வைப் போர்த்தும் பூந்தென்றல்…

BGM

பெண் : ஒரு பகல் உனது…
ஒரு பகல் எனது…
இடையினில் இரவு உறங்கிடுமா…

பெண் : ஒரு இமை உனது…
ஒரு இமை எனது…
இடையினில் கனவு நிகழ்ந்திடுமா…

பெண் : ஒரு மலர் உனது…
ஒரு மலர் எனது…
இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா…

பெண் : ஒரு முகம் உனது…
ஒரு முகம் எனது…
இருவரும் நிலவின் இருபுறமா…

பெண் : ஒரு பதில் உனது…
ஒரு பதில் எனது…
புதிர்களும் உடையுமா…

ஆண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

ஆண் : ஒரு முனை உனது…
ஒரு முனை எனது…
இருவரின் துருவம் இணைந்திடுமா…

ஆண் : ஒரு முகில் உனது…
ஒரு முகில் எனது…
இடையினில் நிலவு கடந்திடுமா…

ஆண் : ஒரு கதை உனது…
ஒரு கதை எனது…
விடுகதை முடியுமா…

BGM


Notes : Oru Arai Unathu Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. ஒரு அறை உனது பாடல் வரிகள்.

Scroll to Top