ஒரே ஒரு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதிப்பு & ஹரிணிதேவி ஸ்ரீ பிரசாத்வேங்கை

Orey Oru Song Lyrics in Tamil


ஆண் : யாரோ மனச உலுக்க…
ஏதோ உடைந்து வலிக்க…
நானோ தனித்து நடக்க…
நீயோ மெளனமாக…

ஆண் : ஒரே ஒரு வார்த்தைக்காக…
ஓயாம காத்திருப்பேன்…
ஒரே ஒரு பார்வைக்காக…
எந்நாளும் தவமிருப்பேன்…

ஆண் : ஒரே ஒரு நொடிக்கூட…
உன்னோடுதான் வாழ்வேனே…
ஒரே ஒரு உயிர் அதை…
உன் கையில் தந்து சாயுவேன்…

பெண் : ஒரே ஒரு வார்த்தையாலே…
என் நெஞ்சு கலைகிறதே…
ஒரே ஒரு பார்வையாலே…
உள்ளூர கரைகிறதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : யாரோ மனசு உலுக்க…
ஏதோ உடைந்து வலிக்க…

BGM

பெண் : ஓ… சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு…
தவிக்கும் ஒரு இதயம்…
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு…
தவிர்க்கும் ஒரு இதயம்…

பெண் : காதல் என்னும் கைக்குழந்தை…
கதறி அழுகிறதே…
உறவை நெனச்சு உள்ளம் இப்போ…
போராடுதே…

ஆண் : ஒரே ஒரு வார்த்தை கேட்டு…
என் நெஞ்சு வெடிச்சிருச்சே…
ஒரே ஒரு பார்வை புயலாய்…
என்மேல் அடிச்சிருச்சே…

BGM

ஆண் : உள்ளுக்குள்ள முள்ள வச்சு…
எதுக்கு நீ சிரிச்ச…
காதல் என்னும் பேரச்சொல்லி…
கழுத்த நீ நெரிச்ச…

ஆண் : ஒன்ன நெனச்ச பாவத்துக்கு…
இதுதான் தண்டனையா…
என்ன பெத்த தெய்வத்துக்கே…
சோதனையா…

பெண் : ஒரே ஒரு வார்த்தை பேச…
என்னால முடியலையே…

ஆண் : ஒரே ஒரு துரோகம் தாங்க…
என் நெஞ்சில் பலமில்லையே…

ஆண் : யாரோ மனச உலுக்க…
ஏதொ உடைந்து வலிக்க…
நானோ தனித்து நடக்க…
நீயோ மெளனமாக…


Notes : Orey Oru Song Lyrics in Tamil. This Song from Venghai (2011). Song Lyrics penned by Viveka. ஒரே ஒரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading