காலங்காத்தாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகார்த்திக்தேவி ஸ்ரீ பிரசாத்வேங்கை

Kaalangathale Song Lyrics in Tamil


ஆண் : ஹேய்… காலங்காத்தாலே…
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல…
என்னைப் பாத்தாலே…
ஒளிஞ்சுக்கிறியே பெண்ணே…

—BGM—

ஆண் : ஹேய்… காலங்காத்தாலே…
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல…
என்னைப் பாத்தாலே…
ஒளிஞ்சுக்கிறியே பெண்ணே…

ஆண் : பொழுது சாஞ்சாலே…
தலைகுவியும் தாமரை போலே…
என்னைப் பாத்தாலே…
வெட்கப்படுறியே பெண்ணே…

ஆண் : உன்னை நான் பார்த்தேன்…
நான் ரசித்தேன்…
நான் திண்டாடினேன்…

ஆண் : உன்னை நான் தொடர்ந்தேன்…
நான் உணர்ந்தேன்…
நான் காதல் கொண்டேன்…

ஆண் : என் வாழ்க்கையின் வாசலே…
நீயேதானடி…

ஆண் : ஹேய்… காலங்காத்தாலே…
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல…
என்னைப்பாத்தாலே…
ஒளிஞ்சுக்கிறியே பெண்ணே…

—BGM—

ஆண் : உதட்டை சுழித்து…
சிரிக்கும் பொழுது…
உயிரில் வெடிவைக்கிறாய்…

ஆண் : ஒவ்வொரு வார்த்தை…
முடியும் பொழுதும்…
எதற்கு பொடி வைக்கிறாய்…

ஆண் : கொலு பொம்மை போல் இருக்கிறாய்…
நீ கொடிமுல்லை போல் நடக்கிறாய்…
அடிக்கடி நகம் கடிக்கிறாய்…
என்னை மயக்கி மாயம் செய்தாய்…
நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ…

ஆண் : காலங்காத்தாலே…
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல…
என்னைப் பாத்தாலே…
ஒளிஞ்சுக்கிறியே பெண்ணே…

—BGM—

ஆண் : பழசை மறைக்க…
நினைக்கும் உனக்கு…
நடிக்க வரவில்லையே…

ஆண் : உருவம் மறந்து…
புருவம் விரிய…
சிறுவன் நான் இல்லையே…

ஆண் : எதற்க்கு நீ என்னை தவிர்க்கிறாய்…
என் எதிரிலே முகம் சிவக்கிறாய்…
அகமெல்லாம் பொய் பூசியே…
என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்…

ஆண் : என் ஆவியை தாக்கிடும்…
தீயே நீயடி…

ஆண் : காலங்காத்தாலே…
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல…
என்னைப் பாத்தாலே…
ஒளிஞ்சுக்கிறியே பெண்ணே…

ஆண் : பொழுது சாஞ்சாலே…
தலைகுவியும் தாமரை போலே…
என்னைப் பாத்தாலே…
வெட்கப்படுறியே ஹே ஹே பெண்ணே…


Notes : Kaalangathale Song Lyrics in Tamil. This Song from Venghai (2011). Song Lyrics penned by Viveka. காலங்காத்தாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading