புடிக்கல புடிக்குது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாமுகேஷ் & சுசித்ராதேவி ஸ்ரீ பிரசாத்வேங்கை

Pudikale Pudikudhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏ… பெத்தவங்க பார்த்து வச்ச…
பொண்ண எனக்கு புடிக்கல…
பொண்ண கொஞ்சம் புடிச்சாலும்…
தாலி கட்ட புடிக்கல…

ஆண் : தாலி கட்ட நினைச்சாலும்…
ஜாலி பண்ண புடிக்கல…
ஜாலி பண்ணி முடிச்சாலும்…
சேர்ந்து வாழ புடிக்கல…

ஆண் : உன்ன மட்டும் புடிக்குது…
உன் கண்ண மட்டும் புடிக்குது…
உன்ன மட்டும் புடிக்குது…
உன் கண்ண மட்டும் புடிக்குது…

—BGM—

பெண் : ஏ… ஆம்பளைங்க வைச்சிருக்கும்…
மீசை எனக்கு புடிக்கல…
மீச கொஞ்சம் புடிச்சாலும்…
பேச எனக்கு புடிக்கல…

பெண் : பேச கொஞ்சம் நினைச்சாலும்…
பழக எனக்கு புடிக்கல…
பழகி பார்த்து தொலைச்சாலும்…
பல்லானது புடிக்கல…

பெண் : உன்ன மட்டும் புடிக்குது…
உன் கண்ண மட்டும் புடிக்குது…
உன்ன மட்டும் புடிக்குது…
உன் கண்ண மட்டும் புடிக்குது…

—BGM—

பெண் : ஏ… தூத்துகுடியில…
துடிப்பான ஆளொருத்தன்…
துரத்திவந்தானே எனக்கு புடிக்கல…

—BGM—

ஆண் : ஏ ஹே… காரைக்குடியில…
கலையான பெண்ணொருத்தி…
கண்ணடிச்சாளே எனக்கு புடிக்கல…

—BGM—

பெண் : ஏ… சேல கட்ட புடிக்கல…
சீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல…

ஆண் : ஏ… வேட்டி சட்ட பிடிக்கல…
விதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல…

பெண் : பலகாரம் புடிக்கல…
பல வாரம் தூங்கல…
எனக்கு என்னையே கூட…
சில நேரம் புடிக்கல…

பெண் : உன்ன மட்டும் புடிக்குது…
உன் கண்ண மட்டும் புடிக்குது…

ஆண் : உன்ன மட்டும் புடிக்குது…
உன் கண்ண மட்டும் புடிக்குது…

—BGM—

ஆண் : ஹே கெட்ட பழக்கம்…
அஞ்சாறு வச்சிருந்த…
சத்தியமா ஒன்னும் இப்போ புடிக்கல…

குழு : புடிக்கல புடிக்கல…

பெண் : ஹே ஹே நல்ல புள்ளன்னு…
ஊரெல்லாம் பேரெடுத்தேன்…
காப்பாத்தி கொள்ள இப்போ புடிக்கல…

குழு : புடிக்கல புடிக்கல…

ஆண் : யே… ஊர சுத்த புடிக்கல…
கபடியில ஜெயிச்சாலும் கத்த புடிக்கல…

பெண் : கோ கோ கோலம்…
போட புடிக்கல…
கும்மி பாட்டு கேட்டாலும்…
ஆட புடிக்கல…

ஆண் : குற்றாலம் புடிக்கல…
கொடைகானல் புடிக்கல…
கோவா, ஊட்டி, மைசூர், டார்ஜிலிங் புடிக்கல…

ஆண் : டார்லிங் உன்னை புடிக்குது…
மனம் டாவடிக்க துடிக்குது…

பெண் : மச்சான் உன்ன புடிக்குது…
என் மனசு இப்போ துடிக்குது… துடிக்குது…

—BGM—


Notes : Pudikale Pudikudhu Song Lyrics in Tamil. This Song from Venghai (2011). Song Lyrics penned by Viveka. புடிக்கல புடிக்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading