ஊஞ்சல் மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாயுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித் கோவிந்த் & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாலத்தி

Oonjal Manam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்…
மனதோரம் முதல் காதல் தோன்றும்…
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்…
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்…

பெண் : தாலாட்ட காதல் வந்தால்…
காயம் யாவும் ஆறாதோ…
பேசாமல் மார்பில் தூங்கிடவா…

பெண் : மெளனத்தை மெளனம் சென்று…
ஒட்டு கேட்கும் இந்நேரம்…
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்…

பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்…
மனதோரம் முதல் காதல் தோன்றும்…
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்…
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்…

—BGM—

பெண் : எது ஆனால் என்ன…
உன்னை விட்டு தர மாட்டேன்…
சிறு கண்ணில் வைத்து…
கண்ணில் வைத்து காத்து கிடப்பேன்…

பெண் : அட காலம் வந்து உனை காயம் செய்யும் போது…
என் காதல் என்னும் மாயம் தந்து தேற்றிடுவேன்…

பெண் : வயதானால் கூட உன்னைவிட்டு…
தள்ளி செல்ல மாட்டேன்…
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி பூத்திருப்பேன்…

பெண் : பலநூறு கதை பேச எண்ணி…
அன்பு முகம் ஏந்தி…
காதோரம் மூச்சில் காதல் உரைப்பேன்…

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே…
பேரன்பின் தூதே…
நீ என்னும் தூரம் வரை…
நானும் நடப்பேன்…

ஆண் : அன்பே அன்பே அன்பே…
நீ உள்ள வாழ்வில்…
தோற்றாலும் மீண்டும் மீண்டும்…
நானே ஜெயிப்பேன்…

பெண் : தாலாட்ட காதல் வந்தால்…
காயம் யாவும் ஆறாதோ…
பேசாமல் மார்பில் தூங்கிடவா…

பெண் : மெளனத்தை மெளனம் சென்று…
ஒட்டு கேட்கும் இந்நேரம்…
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்…

—BGM—


Notes : Oonjal Manam Song Lyrics in Tamil. This Song from Laththi (2022). Song Lyrics penned by Karthik Netha. ஊஞ்சல் மனம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading