ஓ ப்ரியசகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீனிவாஸ் & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிரியசகி

Oh Priyasakhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

ஆண் : என் ஜென்மம் முழுவதும் நீயடி…
என் ஜீவனடியே நீயடி…
வாழ்வின் எல்லை வரை…
வாழ்வின் எல்லை வரை…

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

BGM

ஆண் : மேகமாய் வந்து பூவிதைகளை…
மோகம் கொண்டு தூவ…
பூவிதழ் வழி தேன் துளி…
பட்டு தேகம் சூடாக…

பெண் : பூ மகள் சூடாகினாள்…
அந்த தேன் துளி என்ன ஆகும்…
ஆசையாய் நீ தீண்டினால்…
அது மீண்டும் பூவாகும்…

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது…
தேவலோகம் தெரிகிறது…

பெண் : எந்தன் மார்பில் சாயும் போது…
இன்ப லோகம் தெரிகிறது…

ஆண் : வா வா என் தேவதையே தேவதையே…

பெண் : ஓ ப்ரியசகி உன் ப்ரியசகி…
உன் உயிரிலே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…

BGM

பெண் : தேவதை இதழ் ஓரமே…
மது ஊருதே சுவையாக…
வேண்டுமே சரி பாதியை…
சுகம் யாவும் எனக்காக…

ஆண் : தேடுதே சுகம் தேடுதே…
இதழ் பாயுதே சுவைக்காக…
தேவைகள் உன் தேவைகள்…
நான் தருவேன் முழுதாக…

பெண் : பார்வை பட்ட நொடியில் எந்தன்…
உயிரும் பற்றி எரிகிறதே…

ஆண் : பாவை உந்தன் கைகள் பட்டு…
உலகம் பற்றி எரிகிறதே…

பெண் : எரிகிறதை அணைத்துவிடு…
என்னை அணைத்துவிடு…

BGM

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

ஆண் : இது உதடுகள் நடத்தும் யுத்தமா…
இல்லை இதயங்கள் துடிக்கும் சத்தமா…
வாழ்வின் எல்லை வரை…


Notes : Oh Priyasakhi Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. ஓ ப்ரியசகி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading