ஓடும் மேகங்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திஆயிரத்தில் ஒருவன்

Odum Megangale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…

ஆண் : ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…

—BGM—

ஆண் : நாடாளும் வண்ண மயில்…
காவியத்தில் நான் தலைவன்…
நாட்டிலுள்ள அடிமைகளில்…
ஆயிரத்தில் நான் ஒருவன்…

ஆண் : நாடாளும் வண்ண மயில்…
காவியத்தில் நான் தலைவன்…
நாட்டிலுள்ள அடிமைகளில்…
ஆயிரத்தில் நான் ஒருவன்…

ஆண் : மாளிகையே அவள் வீடு…
மரக்கிளையில் என் கூடு…
வாடுவதே என் பாடு…
இதில் நான் அந்த மான்…
நெஞ்சை நாடுவதெங்கே கூறு…

ஆண் : ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…

—BGM—

ஆண் : ஊரெல்லாம் தூங்கையிலே…
விழித்திருக்கும் என் இரவு…
உலகமெல்லாம் சிரிக்கையிலே…
அழுதிருக்கும் அந்த நிலவு…

ஆண் : ஊரெல்லாம் தூங்கையிலே…
விழித்திருக்கும் என் இரவு…
உலகமெல்லாம் சிரிக்கையிலே…
அழுதிருக்கும் அந்த நிலவு…

ஆண் : பாதையிலே வெகு தூரம்…
பயணம் போகின்ற நேரம்…
காதலை யார் மனம் தேடும்…
இதில் நான் அந்த மான்…
நெஞ்சை நாடுவதெங்கே கூறு…

ஆண் : ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…

ஆண் : ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…


Notes : Odum Megangale Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (1965). Song Lyrics penned by Kannadhasan. ஓடும் மேகங்களே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading