அதோ அந்த பறவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திஆயிரத்தில் ஒருவன்

Adho Andha Paravai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அதோ அந்த பறவை போல…
வாழ வேண்டும்…
இதோ இந்த அலைகள் போல…
ஆட வேண்டும்…

ஆண் : ஒரே வானிலே…
ஒரே மண்ணிலே…
ஒரே வானிலே ஒரே மண்ணிலே…
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்…

குழு : அதோ அந்த பறவை போல…
வாழ வேண்டும்…
இதோ இந்த அலைகள் போல…
ஆட வேண்டும்…

குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே…
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்…

—BGM—

குழு : லலாலா லா… லலாலா லா…
லலாலா லா… லலாலா லா…

—BGM—

ஆண் : காற்று நம்மை அடிமை என்று…
விலக வில்லையே…
கடல் நீரும் அடிமை என்று…
சுடுவதில்லையே…

குழு : சுடுவதில்லையே…

ஆண் : காலம் நம்மை விட்டு விட்டு…
நடப்பதில்லையே…
காதல் பாசம் தாய்மை நம்மை…
மறப்பதில்லையே…

குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே…
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்…

குழு : அதோ அந்த பறவை போல…
வாழ வேண்டும்…
இதோ இந்த அலைகள் போல…
ஆட வேண்டும்…

குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே…
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்…

—BGM—

குழு : லலாலா லா… லலாலா லா…
லலாலா லா… லலாலா லா…

—BGM—

ஆண் : தோன்றும்போது தாயில்லாமல்…
தோன்றவில்லையே…
சொல்லில்லாமல் மொழியில்லாமல்…
பேசவில்லையே…

குழு : பேசவில்லையே…

ஆண் : வாழும்போது பசியில்லாமல்…
வாழவில்லையே…
போகும்போது வேறு பாதை…
போகவில்லையே…

குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே…
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்…

—BGM—

குழு : லலாலா லா… லலாலா லா…
லலாலா லா… லலாலா லா…

—BGM—

ஆண் : கோடி மக்கள் சேர்ந்து வாழ…
வேண்டும் விடுதலை…
கோயில் போலே நாடு காண…
வேண்டும் விடுதலை…

குழு : வேண்டும் விடுதலை…

ஆண் : அச்சமின்றி ஆடி பாட…
வேண்டும் விடுதலை…
அடிமை வாழும் பூமி எங்கும்…
வேண்டும் விடுதலை…

குழு : ஒரே வானிலே
ஒரே மண்ணிலே…
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்…

—BGM—


Notes : Adho Andha Paravai Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (1965). Song Lyrics penned by Kannadhasan. அதோ அந்த பறவை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading