நீர்குமிழோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசித் ஸ்ரீராம்கிரிஷ் கோபாலகிருஷ்ணன்கொலை

Neerkumizho Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீர்குமிழோ…
நெடுங்கனவோ…
தீயினில் விழும் பொன்தூறல்…
இவ்வாழ்வோ…

ஆண் : ஏன் பிரிவோ…
எது முடிவோ…
நீரின் மூழ்கும் மண்பொம்மைகள்…
நாமோ…

ஆண் : ஓசை இல்லாமல்…
உறவும் இல்லாமல்…
ஊமை என் நெஞ்சின்…
தாலாட்டும் நீயோ…

ஆண் : தூதும் இல்லாமல்…
தனிமை தாங்காமல்…
கூண்டுக்குள் மூச்சுவிடும்…
தென்றல் நீயோ…

ஆண் : தீராத காற்றில்…
உனை மாறாத நேற்றில்…
அடைத்தேனே துடித்தேனே…
அழகே… ஓஓ… ஓஓ…

ஆண் : மாயாத நோக்கில்…
புயல் ஓயாத போக்கில்…
அலைந்தேனே குமைந்தேனே…
உயிரே… ஓஓ… ஓஓ…

—BGM—

ஆண் : யார் வலையோ…
எவர் இரையோ…
இரைச்சலின் உள்ளாடும்…
பாடல்கள் நாமோ…

ஆண் : யார் பிழையோ…
எது சரியோ…
கானலின் நீருக்குள்…
விண் மீன்கள் நாமோ…

ஆண் : வானம் செல்ல…
நீயும் கேட்டாயே…
அன்பெனும் தூண்டில் தனில்…
நான் உன்னை மாட்டி வைத்தேன்…

ஆண் : விடுதலை கேட்கிறாய்…
வலியுடன் பார்கிறாய்…
எதை எதை நான் நான் செய்ய…

ஆண் : தீராத காற்றில்…
உனை மாறாத நேற்றில்…
அடைத்தேனே துடித்தேனே…
அழகே… ஓஓ… ஓஓ…

ஆண் : மாயாத நோக்கில்…
புயல் ஓயாத போக்கில்…
அலைந்தேனே குமைந்தேனே…
உயிரே… ஓஓ… ஓஓ…
ஓஓ.. ஓஓ… ஓஓ.. ஓஓ…

ஆண் : பேர் இசையே…
பெரு நிலையே…
ஈரங்கள் காயாத ஏகாந்தங்கள் நீயே…

ஆண் : மீ மிசையே…
மிகுமதியே…
மார்பினில் மாறாத வாசங்கள் நீயே…

ஆண் : பேர் இசையே…
பெரு நிலையே…
ஈரங்கள் காயாத ஏகாந்தங்கள் நீயே…

ஆண் : மீ மிசையே…
மிகுமதியே…
மார்பினில் மாறாத வாசங்கள் நீயே…

ஆண் : காரிருள் மேலே…
விழும் சீர் ஒளி நீயே…
உணர்ந்தேனே உணர்ந்தேனே…
உயிரே… ஓஓ… ஓஓ…


Notes : Neerkumizho Song Lyrics in Tamil. This Song from Kolai (2023). Song Lyrics penned by Karthik Netha. நீர்குமிழோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading