ஓடாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிஅனந்து & ஆண்ட்ரூவிஜய் ஆண்டனிஅண்ணாதுரை

Odathey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓடாதே ஓடாதே…
நியாயங்கள் தேடாதே…
இங்கே நல்லவனாய் வாழ்ந்தால் போதாதே…
பூமி கெட்டவனை கேள்வி கேட்காதே…

குழு : தூளாகும் சூது…
திமிராக மோது…
நீ திருந்திட நினைத்தால் உலகம் திருந்தாது…
உன்னை துரத்திய கூட்டம் தெறித்திட விளையாடு…

குழு : ஓடாதே ஓடாதே…
நியாயங்கள் தேடாதே…

—BGM—

ஆண் : நீதியும் நேர்மையும் வாழ்வில் தேவை என்று…
சாத்திரம் சொன்னது உண்மை இல்லையோ…

—BGM—

ஆண் : போலியும் பொய்களும் போட்டி போடும் போது…
பூமியில் நியாயமே வாழ்வதில்லையோ…
இருட்டில் நாம் நடக்கும் போது நிழலும் இல்லை…
நீ வாழ உண்மை தவிர துணையும் இல்லை…

குழு : துன்பம் இன்பம் வாழ்வில் பாதி…
துவளாமல் முட்டி மோதி…
திருந்திட நினைத்தால் உலகம் திருந்தாது

ஆண் : ஓடாதே ஓடாதே…
நியாயங்கள் தேடாதே…

—BGM—

ஆண் : நன்மைகள் தீமைகள் ரெண்டும் உண்மை இல்லை…
தேவைகள் மட்டுமே நியாயமானதே…

—BGM—

ஆண் : இன்பமும் துன்பமும் தூரம் ஒன்றும் இல்லை…
வாழ்க்கையில் ரெண்டுமே பாடமானதே…
திருப்பங்கள் இல்லாவிட்டால் பாதை இல்லை…
திரும்பாமல் நீயும் சென்றால் பயணம் இல்லை…

குழு : கொன்றாலும் பாவம் என்பார்…
தின்றால் அது போகும் என்பார்…
திருந்திட நினைத்தால் உலகம் திருந்தாது…

ஆண் : ஓடாதே ஓடாதே…
நியாயங்கள் தேடாதே…
இங்கே நல்லவனாய் வாழ்ந்தால் போதாதே…
பூமி கெட்டவனை கேள்வி கேட்காதே…

குழு : தூளாகும் சூது…
திமிராக மோது…
நீ திருந்திட நினைத்தால் உலகம் திருந்தாது…
உன்னை துரத்திய கூட்டம் தெறித்திட விளையாடு…


Notes : Odathey Song Lyrics in Tamil. This Song from Annadurai (2017). Song Lyrics penned by Arun Bharathi. ஓடாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading