நிமிர்ந்து நில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ஷங்கர் மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாசரோஜா

Nimirnthu Nil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நிமிர்ந்து நில் துணிந்து செல்…
தொடங்குது உன் யுகம்…
நினைத்ததை நடத்திடு…
நினைப்புதான் உன் பலம்…

ஆண் : தடைகளை உடைத்திடு…
தாமதம் அதைவிடு…
கடமைகள் புதியது…
கரங்களை இணைத்திடு…

ஆண் : போன வழி மாறி போனாலே வாராது…
போ உந்தன் புது பாதை போராடிடு…
காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது…
காலத்தை நீ மாற்று கரையேறி முன்னேறு…

ஆண் : நிமிர்ந்து நில் துணிந்து செல்…
தொடங்குது உன் யுகம்…
நினைத்ததை நடத்திடு…
நினைப்புதான் உன் பலம்…

ஆண் : தடைகளை உடைத்திடு…
தாமதம் அதைவிடு…
கடமைகள் புதியது…
கரங்களை இணைத்திடு…

—BGM—

ஆண் : நேற்றும் இல்லை நாளை இல்லை…
இன்றுமட்டும் என்றும் உண்டு…
மாற்றம் எல்லாம் மாற்றம் இல்லை…
மாற வேண்டும் நீயும் இன்று…

ஆண் : ஓடி ஓடி கால்கள் ஓய்ந்து…
தேடி தேடி கண்கள் சாய்ந்து…
போவதேனோ வீரன் என்று பிறப்பதில்லை…
வீரனாக ஆவதுண்டு…
கோழை என்று எவனும் இல்லை…
கோபம் கொண்டால் கோழை இல்லை…

ஆண் : இங்கு உன் வாழ்க்கை உன் கையில்…
உன் வேகம் உன் நெஞ்சில்…
இங்கே உன் ஆண்மைக்கு இப்போதுதான் சோதனை…

ஆண் : இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்…
சிறையில் சிக்கிக் கொண்டேன் ஏனம்மா…
வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்…
வழியில் மாட்டிக் கொண்டேன் நானம்மா…
உயிரே… ஏ… உயிரே… ஏ…

ஆண் : நிமிர்ந்து நில் துணிந்து செல்…
தொடங்குது உன் யுகம்…
நினைத்ததை நடத்திடு…
நினைப்புதான் உன் பலம்…

ஆண் : தடைகளை உடைத்திடு…
தாமதம் அதைவிடு…
கடமைகள் புதியது…
கரங்களை இணைத்திடு…

—BGM—

ஆண் : விழுவதென்றால் அருவி போல…
எழுவதென்றால் இமயம்போல…
அழுவதென்றால் அன்புகாக…
அனைத்தும் இங்கே நட்புக்காக…

ஆண் : ஓய்ந்து போனால் சாய்ந்து போனால்…
உந்தன் வாழ்வில் ஏதுமில்லை…
ஓய்ந்திடாது மோதிப்பாரு முயன்று ஏறு…
முடிவு உந்தன் படைகள் வெல்லும்…
வந்து போவார் கோடி பேர்கள்…
வாழ்ந்தவர் யார் உலகம் சொல்லும்…

ஆண் : நீயும் முன்னாடியே ஜிரோ…
இப்போதுதான் ஹீரோ…
நில்லாதே எப்போதும் உன்முன்னே தடைகள் இல்லை…

ஆண் : நிமிர்ந்து நில் துணிந்து செல்…
தொடங்குது உன் யுகம்…
நினைத்ததை நடத்திடு…
நினைப்புதான் உன் பலம்…

ஆண் : தடைகளை உடைத்திடு…
தாமதம் அதைவிடு…
கடமைகள் புதியது…
கரங்களை இணைத்திடு…

ஆண் : போன வழி மாறி போனாலே வாராது…
போ உந்தன் புது பாதை போராடிடு…
காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது…
காலத்தை நீ மாற்று கரையேறி முன்னேறு…

ஆண் : நிமிர்ந்து நில் துணிந்து செல்…
தொடங்குது உன் யுகம்…
நினைத்ததை நடத்திடு…
நினைப்புதான் உன் பலம்…

ஆண் : தடைகளை உடைத்திடு…
தாமதம் அதைவிடு…
கடமைகள் புதியது…
கரங்களை இணைத்திடு…


Notes : Nimirnthu Nil Song Lyrics in Tamil. This Song from Saroja (2008). Song Lyrics penned by Gangai Amaren. நிமிர்ந்து நில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading