நில்லாயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிசரண்சந்தோஷ் நாராயணன்பைரவா

Nillayo Song Lyrics in Tamil


BGM

ஆண் : மஞ்சள் மேகம்…
ஒரு மஞ்சள் மேகம்…
சிறு பெண்ணாகி முன்னே போகும்…

ஆண் : பதறும் உடலும்…
என் கதறும் உயிரும்…
அவள் போ் கேட்டு பின்னே போகும்…

ஆண் : செல்ல பூவே…
நான் உன்னை கண்டேன்…
சில்லு சில்லாய்…
உயிா் சிதற கண்டேன்…

ஆண் : நில்லாயோ… நில்லாயோ…
உன் போ் என்ன…
உன்னாலே மறந்தேனே…
என் போ் என்ன…

BGM

ஆண் : கனவா கனவா…
நான் காண்பது கனவா…
என் கண் முன்னே கடவுள் துகளா…

ஆண் : காற்றின் உடலா…
கம்பன் கவிதை மடலா…
இவள் தென்நாட்டின் நான்காம் கடலா…

ஆண் : சிலிக்கான் சிலையோ…
சிறுவாய் மலரோ…
வெள்ளை நதியோ…
வெளியூர் நிலவோ…

ஆண் : நில்லாயோ… நில்லாயோ…
உன் போ் என்ன…
உன்னாலே மறந்தேனே…
என் போ் என்ன…

BGM

ஆண் : செம்பொன் சிலையோ…
இவள் ஐம்பொன் அழகோ…
பிரம்மன் மகளோ…
இவள் பெண்பால் வெயிலோ…

ஆண் : நான் உன்னை போன்ற பெண்ணை கண்டதில்லை…
என் உயிாில் பாதி யாரும் கொன்றதில்லை…
முன் அழகால் முட்டி மோட்சம் கொடு…
இல்லை பின் முடியால் என்னை தூக்கிலிடு…

ஆண் : நில்லாயோ… நில்லாயோ…
உன் போ் என்ன…
உன்னாலே மறந்தேனே…
என் போ் என்ன…

BGM


Notes : Nillayo Song Lyrics in Tamil. This Song from Bairavaa (2017). Song Lyrics penned by Vairamuthu. நில்லாயோ பாடல் வரிகள்.


Scroll to Top