நிலவொன்று கண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகைராசிக்காரன்

Nilavondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…
கனவொன்று கண்டேன் உன் கண்களில்…
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…

ஆண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்…
பனித் தோட்டம் யாவும் அனலாக மாறும்…

ஆண் : சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்…
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்…

பெண் : பூவுக்கு வாய்ப்பூட்டு என் சோகம் நீ மாற்று…
ஆண் : என் வாழ்விலே தீபம் ஏற்று…

பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…
கனவொன்று கண்டேன் உன் கண்களில்…
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…

பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…

BGM

ஆண் : நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே…
பெண் : நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே…

ஆண் : உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே…
உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே…

பெண் : நான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்ல…
ஆண் : என் தெய்வமே நீ பெண்ணல்ல…

பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…
ஆண் : கனவொன்று கண்டேன் உன் கண்களில்…

பெண் : கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…
ஆண் : கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…

பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…


Notes : Nilavondru Song Lyrics in Tamil. This Song from Kairasikkaran (1984). Song Lyrics penned by Vairamuthu. நிலவொன்று கண்டேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading