நிக்கிற பொழுதுதான் போகப்போதே

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜே.பி. வீரமணி & யுகபாரதிஜே.பி. வீரமணிடி. இமான்கழுவேத்தி மூர்க்கன்

Nikkira Pozhuduthan Pogapothey Song Lyrics in Tamil


ஆண் : நிக்கிற பொழுதுதான் போகப்போதே…

BGM

ஆண் : நிக்கிற பொழுதுதான் போகப்போதே…
உன் பொண்ணு தேருதான் சாயப்போதே…

ஆண் : நிக்கிற பொழுதுதான் போகப்போதே…
என்ன பெத்த அய்யா…
உன் பொண்ணு தேருதான் சாயப்போதே…

ஆண் : ஐயா உனக்கு சடங்கு நடக்கப்போதே…
சடங்கு நடக்கப்போதே…
என்ன பெத்த பாசக்கார அய்யா…
உன் தங்கத் தேருதான் சாயப்போதே…

ஆண் : ஐயா உனக்கு வெள்ள விளக்கெறியும்…
வெள்ள விளக்கெறியும்…
என்ன பெத்த பாசக்கார அய்யா…
உன்ன சுமக்க மேலூரு கப்பல் வரும்…
மேலூரு கப்பல் ஏறி…
நீ வெகு தூரமா போவதென்ன…

BGM

ஆண் : உன்ன கல்லுல கப்பல் செஞ்சே…
உன்ன கல்லுல கப்பல் செஞ்சே…
என்ன பெத்த பாசக்கார அய்யா…
உன்ன கடலுலதான் விட்டோம் நாங்க…

BGM

ஆண் : உன்ன கல்லுல கப்பல் செஞ்சே…
உன்ன கடலுல விட்டோம் நாங்க…
கடலுல விட்ட கப்பல்…
கரையில வந்து சேர்வதெப்போ…

ஆண் : நிக்கும் மரத்துல கப்பல் செஞ்சே…
நிக்கும் மரத்துல கப்பல் செஞ்சே…
என்ன பெத்த ஐயா…
உன்ன நடுவுல விட்டோம் நாங்க…
உன்ன நடுவுல விட்ட கப்பல்…
ஐயா நீங்க கரைய வந்துதான் சேர்வதெப்போ…

BGM

ஆண் : எட்டாத கோவிலுக்கே எட்டாத கோவிலுக்கே…
ஏணி வச்சிதான் தீபமிட்டோம்…
அந்த எட்டுல ஒரு தெய்வம்…
உனக்கு எதிர வந்து நிக்கலியே…

ஆண் : பத்தாத கோவிலுக்கு…
படி வச்சி தீபமிட்டோம்…
அந்த பத்துல ஒரு தெய்வம்…
உனக்கு பக்க துணை நிக்கலியே…

ஆண் : காகம் சரிஞ்சிருந்தா காகம் சரிஞ்சிருந்தா…
காகமெல்லாம் கூச்சலிடும்…
எங்க சனத் தலைவன் சரிஞ்ச பின்னே…
யாரிடத்தே சொல்லி அழ…


Notes : Nikkira Pozhuduthan Pogapothey Song Lyrics in Tamil. This Song from Kazhuvethi Moorkkan (2023). Song Lyrics penned by J.P.Veeramani & Yugabharathi. நிக்கிற பொழுதுதான் போகப்போதே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top